இன்டர்நெட் உபயோகமும் குடும்பமும்
His Grace Ministry Team

இந்த நூற்றாண்டின் மிக பெரிய கண்டுபிடிப்பு, "இன்டர்நெட்" என சொல்லலாம். அதனால் கிடைக்க கூடிய பலன்கள் பல. ஆக்கபூர்வமான பல நன்மைகளை அதன் மூலம் நாம் தொடர்ந்து பெற்று கொண்டிருந்த்தாலும், தீமைக்கு ஏதுவான தேவனுக்கு பிரியமில்லாத பல காரியங்களுக்கு தூண்டுகோளாக இருக்கின்றது. சமீபத்தில் நடந்த இரு சம்ப்பவங்களை இங்கே தர விரும்ம்புகிறோம்.

1) ஜோர்டான் நாட்டில் அலைந்து கொண்டிருந்த ஒரு வாலிப பெண்ணை விசாரித்த போது, அந்த பெண் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் ( Michigan) என்ற நகரத்தில் இருந்து "Myspace.com" என்ற இணைத்தளத்தின் மூலம் அறிமுகமான நபரை காண பெற்றோருக்கு தெரியாமல் காண வந்திருப்பதாக சொன்னாள்.

2) ஒரு விவாகரத்து வழக்கு கோவை நீதி மன்றத்துக்கு முன் வந்தது.  அந்த இளம் வயதுள்ள கணவனும் மனைவியும் மிக நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கணவன் அந்த வட்டாரத்தில் நல்ல பொறுப்பில் இருப்பவர். அந்த இளம் மனைவி இன்டர்நெட்டினால் நடந்த கொடுமையை நீதிபதிக்கு விவரித்த போது கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஆம். 20 வருடங்களுக்கு முன் ஊரின் ஒதுக்கு புறத்திலும், இரகசிய இடங்களிலும், ஊர்க்கோடியில் உள்ள "மூவி" தியேட்டர்களில் நடைபெற்றவைகள், இப்போது "பிரைவுசர்" செண்டர்களிலும்,  வீட்டுக்கு உள்ளேயும் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. இந்த சீரவிழுருந்து நம் குடும்பத்தை விலக்கி தேவனை விட்டு விலகாமல் பாதுகாக்க நாம் மிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.

குழந்தைகளை, குறிப்பாக வாலிப பிள்ளைகளை இன்டர்நெட் உபயோகிக்கும் போது கண்காணிப்புக்குள் வைத்திருப்பது மிக அவசியம். அதற்கு கீழ்கண்ட சில வழிகளை பின் பற்றலாம்.
 
1) எந்த வெப் சைட்களுக்கு செல்கின்றார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பெரும்ப்பாலான  கம்ப்யூட்டர் வைரஸ் அழிக்கும் ( Anti Virus) சாஃப்ட்வேர்களில் ( Microsoft Equipt, Norton Internet Security ) இதற்கு தேவையான உபகரணங்கள் (Modules) அதன் கூடவே இருக்கின்றன. இவற்றை பயன்படுத்தி அடிக்கடி எந்த வெப் சைட்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

2) இன்டர்நெட் உபயோக படுத்தும் நேரத்தை மட்டுபடுத்துவது மிக அவசியம். குறிப்ப்பாக இராத்திரி வேளைகளில் இன்டர்நெட்டில் இருப்பதை ( பெரியவர்களுக்கும் இது பொருந்தும்) தவிர்க்க வேண்டும்.

3) படுக்கை அறைகளில் மற்றும் கதவை சாத்திக்கொண்டு தனி அறைகளில் இன்டர்நெட் உபயோக படுத்துவதை உற்சாக படுத்துவது கூடாது.

4) நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் தெரிகிறாதா என்பதை மனதில் வைத்து கண்கானிக்க வேண்டும்.

5) ஈமெயில் அக்கவுண்ட் இருந்தால் அதற்கான பாஸ்வோர்டை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

மேற்கொண்ட காரியங்களை செய்யும் போது, பிள்ளைகளின் நலனுக்காக தான் செய்கின்றோம் என்பதை அவர்களுக்கு உணர வைத்து விட்டு செயல் படுத்த வேண்டும். எபேசியர் 6:4 ல் கூறுவதுபோல பிள்ளைகளைக்  கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்க்க வேண்டும்.

(இந்த கட்டுரையில் வரும் பெயர்களும், ஊர் பெயரும் மாற்றப்பட்டிருக்கின்றன)