நம்மால் முடியுமா?
சகோ. சாம்சன் பால்
Reaching out people

நான் போய் இந்த பெலிஸ்தனோடே யுத்தம் பண்ணுவேன் - 1 சாமு-17:32

கோலியாத் என்ற ராட்சதனான மனிதனை எதிர்த்த தாவீது ஆடுகளை மேய்;த்துக்கொண்டிருந்த ஒரு சாதாரணமான இளைஞன்தான். அவன் கோலியாத்தைப் போன்று பெரிய வலிமையான உடற்கட்டோ, போர்ப் பயிற்சியோ பெற்றிருந்தவன் அல்ல. அவனிடம் கோலியாத்திடம் இருந்தது போன்ற பயங்கரமான போர் ஆயதங்களும் இருக்கவில்லை. ஆயினும் அவனால் சாதாரணமான சிறு கவண்கற்களைக் கொண்டு கோலியாத்தை வீழ்த்த முடிந்தது.

காரணம் என்ன? கோலியாத்தை விட வலிமை மிகுந்த ஒரு தேவனோடு தொடர்புடைய ஒரு வாழ்க்கையை அவன் வாழ்ந்தான். எனவே தன்னுடைய சக்திக்கு மிஞ்சிய ஒன்றாக இருந்த போதிலும் தேவசக்தி அவனுக்குத் துணையாக வந்து வெற்றியைத் தந்தது.

சில நேரங்களில் நாம் சந்திக்க நேரிடும் சோதனையான சூழ்நிலைகள் நம்முடைய வலிமைக்கு அப்பாற்பட்டு மிகப் பெரியதாக இருக்க முடியும். இவ்வளவு பெரிய பிரச்சினைகளைச் சந்திக்க நம்மிடம் இருக்கும் ஆற்றல் சற்றும் போதாது போலவேத் தோன்றும். ஆயினும் நாம் தேவனை விசுவாசித்து, அவரைச் சார்ந்து, அவரோடு தொடர்புடைய ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் நம்மால் கூடாதது ஒன்றுமில்லை.

நீ செய்ததை எத்தனை பேர் பாராட்டினார்கள் என்பதைவிட அதனால் எத்தனைபேர் பயன்பட்டார்கள் என்பதையே பார்.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.