உங்களால் கூடும்
சகோ. சாம்சன் பால்
Reaching out people

ஜெயமோ கர்த்தரால் வரும்... நீதி – 21:31

சிறு வயதில் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு தன் கால்களைத் தரையில் ஊன்றி நிற்க முடியாத அளவிற்;கு பலவீனப் பட்டவர்தான் வில்மாரூடால்ப். ஆனால் 1960-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் உலகிலேயே அதிவேகமாக ஓடுகின்ற பெண் என்று பேர் பெற்ற பெண்ணும் வில்மா ரூடால்ப்தான். கற்பனை செய்து கூடப் பார்ப்பதற்கு அரிதான இந்த சாதனையை வில்மா நிகழ்த்த முடிந்ததற்கு காரணம் என்ன? இயலாமைகளையும், பலவீனங்களையும் கணக்கிட்டுப் பார்த்துக் கொண்டிராமல், ஏதோ ஒன்றைச் சாதித்துக் காட்ட வேண்டும் என்று ஆர்வம் கொண்டதே ஆகும். சாதிக்க வேண்டும் என்ற இலக்கை உடையவர்கள் தங்களின் பலவீன நிலைகளையெல்லாம் கடந்து போய் வெற்றி காண்பார்கள் என்பதை வில்மா வின் சாதனை விளக்கியது.

தாவீது கோலியாத்தை வெல்லுகின்ற அளவிற்குத் தகுதியான வீரன் அல்ல. யாராலும் முடியாது என்று சொல்லப்பட்ட வேளையில் தான் அவன் முடியும் என்றான். தேவன் மேல் விசுவாசம் வைத்து தேவனை மகிமைப் படுத்தும் தன்மையுள்ள ஒரு அசாதாரண காரியத்தில் ஏன் வெற்றி பெறக் கூடாது என அவன் யோசித்ததான். அவனுக்கு தேவன் உதவி செய்தார்.

இந்தப் பொல்லாத பாவ உலகத்தின் தீய சூழ்நிலைகளை கவனிக்கையில் உண்மையும் உத்தமுமான ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழ்வது கடினம் என்றே தோன்றும். தேவன் விரும்புகின்ற விதமாக வாழ்வதற்கு நம்மிடம் ஆற்றல் இல்லை என்றே நாம் சொல்வோம். ஆனால் தேவன் அதற்குத் தேவையான ஆற்றல் தருவதற்கு ஆயத்ததமாயுள்ளார். ஒரு உயர்ந்த குறிக்கோள் நம்மிடம் இருக்கும்போது அதனை தேவன் நம்மைக் கொண்டே நிறைவேற்றுவார். ஒரு விஷயம் அவசியமானதாகவும், மேன்மையானதாகவும் இருக்கும்போது அதனை அடைவதற்குச் சூழ்நிலைகளையல்ல, தேவனையே நோக்க வேண்டும். அவரால் நிச்சயம் வெற்றி வரும்.

படகு அருகில் இருக்கையில் ஆற்றைக் கடக்க அற்புதம் தேடாதே.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.