“நான் ஓர் போதகர்.. மிஷனரி இயக்கம் ஒன்றில் முன்னேற்ற பணிக்குப் பொறுப்பானவன்.. அகமதாபாத் பகுதியிலுள்ள எங்கள் ஊழியத்தை தாங்கும் குடும்பங்களை சந்திப்பதற்காக என் உடன் ஊழியர்களோடும் அப்பகுதி போதகரோடும் சென்றிருந்தேன்.. அப்போதகர் எங்கள் எங்கள் குழுவிற்க்கு உள்ளுர் தலைவர்.. ஓர் அழகான பங்களா ஒன்றிற்க்கு அழைத்துச் சென்றனர்.. மிக அழகான கட்டிடம்.. சுற்றி அழகான தோட்டம்.. ஆனால் வீடு வெறிச்சோடி இருந்ததை என்னால் உணர முடிந்தது..
கதவைத் தட்டினபோது இளம் வாலிபப் பிள்ளை கதவைத் திறந்தாள்.. வாருங்கள் என்று அழைத்தாள்.. ஆனால் அவள் முகத்திலே துக்கம் நிறைந்திருந்ததை நான் கண்டேன்.. வீட்டிற்க்குள் சென்றோம்.. அமர்ந்தோம்.. அந்த அறையின் ஓர் மூலையில் வயதான தாயார் ஒருவர் முணுமுணுத்துக்கொண்டே படுத்திருந்தார்.. என் அருகில் அமர்ந்த போதகரிடத்தில் “வீட்டுக்காரர் எங்கே..?” என்றேன்.. “அமைதியாயிருங்கள்.. வெளியேவந்த பிறகு சொல்லுகிறேன்.. அவரைக் குறித்து ஒன்றும் கேட்காதிருங்கள்..!” என்றார் போதகர்.. சில நிமிடங்களில் ஓர் பெண்மணி, சுமார் 40 வயதிருக்கும் - அப்பிள்ளையின் தாயார் - “வாருங்கள்.. காப்பி சாப்பிடுங்கள்..” என்று சொல்லி, உள்ளே சென்று சில நிமிடங்களில் காப்பி கொண்டுவந்து எல்லாருக்கும் கொடுத்து தூரத்தில் அமர்ந்தனர்.. அவர்கள் அருகில் அவர்கள் மகளும் உட்கார்ந்தாள்.. அத்தாயார் முகத்தில் துக்கம் நிறைந்திருந்ததை என்னால் உணரமுடிந்தது.. ஓர் பகுதி வாசித்தேன்.. சில வார்த்தைகளில் விளக்கினேன்.. அத்துடன் எங்கள் மிஷனரி பணியின் விரிவாக்கத்தையும், தேவைகளையும் சொன்னேன்.. ஜெபித்தேன்.. ஜெபத்தில் அத்தாயாரும் அம்மகளும் அழும் குரலை என் காது கேட்டது.. ஜெபத்தை முடித்தபோது இரண்டு பேரும் முகத்தைத் துடைத்ததை கண்டேன்.. “என் தாயாருக்கு 70 வயது.. இப்போது காதும் கேட்கவில்லை” என்று படுத்திருந்த தாயாரை அறிமுகம் செய்தார்கள்.. அவர்கள் நெற்றியில் கையை வைத்து சத்தமாக ஜெபித்து, அவர்கள் கொடுத்த அன்பின் காணிக்கையை பெற்று நன்றி சொல்லி, ஆசீர்வதித்து திரும்பினோம்..
இப்போது எங்களோடு வந்த போதகர்: “கேளுங்கள்.. இந்த தாயார் ஓர் நர்ஸ். வளைகுடா நாடு ஒன்றிற்கு வேலைக்குச் சென்று கை நிறைய சம்பளம் வாங்கினவர்கள்.. மாதம் ரூபாய் 70 ஆயிரம் வீட்டிற்கு கணவர் பெயரில் அனுப்பிவிடுவார்கள்.. அவரது மகள் 12ம் வகுப்பு.. இவர்கள் இரண்டு பேருக்கும் சமையல் செய்ய ஓர் வாலிபப் பெண்.. இந்த தாயார், சில மாதங்களுக்கு முன் விடுமுறைக்கு வீடு திரும்பினபோது இவர்களது கணவர் அந்த வேலைக்காரி பெண்ணை வேகமாக திருமணம் செய்து எங்கேயோ மறைந்துவிட்டார்.. இத்தனை பெரிய பங்களா.. வீடு நிறைய பொருட்கள்.. ஆனால், கணவர் வேலைக்காரியோடு ஓடிவிட்டாரே.. எனவேதான் வீட்டுக்காரரைக் குறித்து ஒன்றும் கேட்டுவிடாதிருங்கள்’’ என்றேன்..
நான் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.. தேம்பித் தேம்பி அழுதேன்.. அந்த வாலிபத் தங்கையின் முகத்திலும் அவளது தாயாரின் முகத்திலும் நான் கண்ட துக்கம் என்னை உடைத்தே விட்டது. இப்படி இன்னொரு குடும்பத்திலும் நடந்துவிடக் கூடாதே. அன்று இரவு ஜெபித்தேன். இதனை மறைத்து பல ஆலயங்களிலும் ஆலோசனைக் கொடுத்து வருகிறேன்.
குறிப்பு : வாலிபரே! இளம் தம்பதியரே! திருமணத்திற்குப் பின் வேலைக்காக தூரதேசத்திற்க்குத் தனியாக போவதை தேவன் அனுமதிக்கவில்லையே... “உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்” ( சங்கீதம் 128:3 ) மனைவி வீட்டோரங்களில் கனிதருவரை எதிர்ப்பார்க்கிறாரே.. வெளி நாட்டில் அல்ல.. ஜாக்கிரதை.. இதனை மீறின பல குடும்பங்கள் சிதைந்திருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி உங்கள் வீடுகளில் நடக்கக் கூடாதே.. ஜெபத்துடன்..