Husbands : Be Special...!
Mr.Chandran & Mrs. Roselin Chandran
Reaching out people

1. உங்கள் மனைவிக்கு, எல்லா வீட்டுக் காரியங்களிலும் சிறு உதவிகள் செய்து உங்கள் திறமைகளை இன்னும் வெளிக்காட்டலாமே..!

2. குடும்பமாக, எளிய சுற்றுலா செல்லவும் திட்டமிடலாமே... பிள்ளைகளோடு தரமான நேரம் செலவிடவும், உறவுகளை மேம்படுத்தவும் இவைகள் அதிகம் உதவிடுமே..!

3. வரவுகள், செலவுகள், சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் இவைகளை குறித்து உங்கள் மனைவியிடமும், பிள்ளைகள் பெரியவர்களாயிருப்பின், அவர்களிடமும் கலந்து ஆலோசித்தால் மிகுந்த பலன் அளிக்குமே..!

4. குடும்ப ஜெபம், ஆலய ஆராதனைகளில் சரியான நேரத்தில் பங்கு பெறுதல் போன்றவைகளுக்கு நீங்கள் தானே பொறுப்பு..!

5. உங்கள் பிள்ளைகளுக்காக, வாரத்திற்கு ஒரு நாள் உங்கள் மனைவியுடன் உபவாசித்து ஜெபிப்பது அதிக பாதுகாப்பாக அமையுமே..!

6. பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள்.. நம்பிக்கையூட்டுங்கள்..முன்னேற்றுங்கள் ( எபே.6:4).. எதிர்காலத்தைக் குறித்து தைரியம் தரும் வார்த்தைகளையே பயன்படுத்துங்கள்..!

7. காலை எழும்புவது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை எல்லாவற்றிலும் முன் மாதிரியாய் இருக்க முயற்சி பண்ணுங்கள்..! சொன்னதை செய்யுங்கள்.

8. தனிப்பட்ட முறையில், உங்கள் வாழ்வின் பரிசுத்தத்தை காத்துக் கொள்ள வேதவாசிப்பிற்கும் ஜெபத்திற்கும் முக்கியத்துவம் தாருங்கள்.. ( எபே.5:5,6)

9. கோபத்தையும் ஏமாற்றத்தையும் சரியாய் கையாள கற்றுக் கொள்ளுங்கள்.. எப்பொழுதும் மன்னிக்க ஆயத்தமாயிருங்கள்.."Sorry" சொல்ல முந்தி கொள்ளுங்கள்...!

10. தங்களின் வயதுமுதிர்ந்த பெற்றோரை கூடுதலாய் கனம் பண்ணுவதை, தங்களின் பிள்ளைகள் காணட்டும். அது அவர்களுக்கு அரிய பாடமே..!

11. தங்கள் மனைவி வீட்டாரை இரட்டத்தனையாய் கனம் பண்ணுவதை உலகமே காணட்டும்...! ஆச்சரியப்படட்டும்..! தேவன் மகிழட்டும்...!!

12. Family.. Next to God.. நிரூபித்துக்காட்டுங்கள்...!


கணவன்மார்களுக்கு ஓர் வாக்குத்தத்தம் :

"நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்." - ஆதியாகமம் 22 : 17,18