முதியோர்களே! “தைரியங்கொள்ளுங்கள்”
Shalom Family Enrichment Ministries
Family Pages Article Image

Dr. Miss Adella Paul, M.A., M.Ed., Ph.D.,

1. குடும்பத் தொடர்களில் : முதிர் வயதில், கடக்க வேண்டிய பிரச்சனைகளில் மிக முக்கியமானது ‘குடும்பத் தொடர்பு…’ நாம் எப்போதும் அனுபவித்த அர்த்தங்கள் மாறி வருகின்றன… கண்காணித்து, கண்மணிபோல் வளர்த்த மகன், மகள் எங்கேயோ இக்கிறார்கள்… தாய் தகப்பனைக் காண்பதையோ, மாதத்திற்கொருமுறையாவது தொலைபேசியில் பேசுவதையோ, வேறு விதங்களில் அன்பு செலுத்துவதையோ மறந்து விடுகின்றனர்… என்ன செய்வது? முறுமுறுத்து அழுவதா? அழத்தேவையில்லை… மாறாக புதிய சில தொடர்புகளில் உங்களைத் தெம்பாக்கிக் கொள்ளுங்கள்..

2. வேறுபட்ட தலைமுறை : சில குடும்பங்களில் கூடவே இருக்கும் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் பெற்றோரை “எங்கள் தலைமுறை வேறுபட்டது” எனக் கூறி ஒதுக்கி வைக்கலாம்… குடும்பமாக எடுக்கும் முடிவுகளில் முதிர்வயதோரின் ஞானத்தைத் தேடுவதில்லை… தள்ளிவிடப் பட்டமை. அதிக அளவளாவதல் இன்மை, வெளியே செல்லும் போது விட்டுவிட்டு செல்லுதல். நல்லெண்ணங்களை மதிக்காதது. இவைகளைப் பார்க்கும்போது தங்கள் மனம் கஷ்டப்படுவது இயற்கைதான்… தங்கள் பிள்ளைகள், அவர்க்ள் வாழ்க்கைக்கானவைகளையும் பார்க்க வேண்டுமே…

3. சுதந்திரம் போயிற்றே!: வாலிப வயதில் செய்தவைகள், பணியிலிருந்த நாட்களில் ஏற்ற பொறுப்புகள், சந்தித்ததவர்கள், சாதித்த காரியங்கள் நடத்தின குழுக்கள், எல்லாவற்றையும் இப்போது எண்ணி அந்த சுதந்திரம் போயிற்றே என்று ஏங்கலாமா? அது கோழைத்தனம்… இப்போது இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி எவ்வெவ்விடங்களில் தேவைகளுண்டோ. அவ்விடங்களில் நீங்களாக முன்வந்து தொண்டுகள் செய்யலாமே… தனக்குத்தானே, தன்னம்பிக்கையோடு இயங்குவது தப்பல்ல.. அது சரிதான்.. எனக்கறிந்த 80 வயதான, இருமறை கால் முறிந்து சிகிச்சை பெற்று கோலூன்றி நடக்கும் மூதாட்டி ஒருவர், மாத இதழ்களுக்கு எழுதுகிறார்கள்.. ஆட்டோவில் ஏறி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் கூட்டங்களுக்குச் சென்று இன்றும் உழைத்து வருகிறார்கள். நம்மால் முடிந்ததை முதிர் வயதிலும் முன்வந்து செய்யலாமே. நம் நாட்டில் விருப்பமாகச் செயலாற்றுபவர்களை எத்தனையோ இயக்கங்களும், சேவை மையங்களும் தங்களை தேடிக் கொண்டிருக்கிறார்களே!..

4. நட்பு தேவை: இம்மாறுபாடுகளை நாம் உணர்ந்து சகித்துக் கொள்ளும்போது, நம்மிடத்தில் அன்பு மாறாத தொடர்பு கொள்ளும் தேவனை நாம் அடிக்கடி நாடலாமே. “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி. 13:80) அவர் நம்மை விசாரிக்கிறவர். “அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (மத்.1031) என்று எழுதி வைத்துள்ளாரே. இந்த பெரிய பிரபஞ்சத்தைக் காட்டிலும் நாம் தேவனுக்கு அதிக விசேஷித்தவர்கள்… பயப்படாதேயுங்கள்…

5. தனிமை உணர்வு: பிரச்சனைகளினால் நாம் உணர்ச்சி வசப்படுவது வழக்கம். எவ்வித உணர்ச்சிகள்? நான் ஒன்றும் பயனுள்ளவன்(ள்) அல்ல… என்னை யாரும் மதிப்பதில்லை… அசட்டை செய்யப்பட்டு புறக்கணிக்கப்பட்டவன்(ள்).. நாம் தொலைபேசியை எடுத்தால் “அவரிடம் கொடுங்கள்” என்று கூறுகிறார்களே… அநேகர் பேசாததினால், தனிமையான ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது… வருங்காலத்தைக் குறித்து என்ன நேரிடுமோ என்ற பயமும் எழும்புகிறதே…

வேதப் புத்தகத்தில், வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு “பயப்படாதே” என்று 366 தடவை எழுதப்பட்டுள்ளதே.. அதைப் படித்து திடன் கொள்ளுங்கள், 90 வயதுக்கும் மேற்பட்ட ஓர் சரித்திர ஆசிரியர், தனது பார்வையற்ற நிலையிலும் ஒரு பெரிய இந்திய வரைபடம் பக்கத்தில் வைத்து, அதின்மேல் கை வைத்து வெவ்வேறு மாநிலங்களுக்காக தினமும் ஜெபிக்கிறாரே….     

6. பெலவீனமா?: பெலவீனன் என்ற உணர்ச்சி, உடல் நலக் குறைவு, கவலை, பணக்குறைவு. இவை நாம் சந்திக்கும் பிரச்சனைதான். “சோர்ந்து போகிறவனுக்கு அவர் (கர்த்தர்) பெலன் கொடுத்து சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்” (ஏசா.4029) ஆகவே தேவனை நம்பி முன் செல்லலாமே.. எதிர்மறையான உணர்ச்சிகளை விட்டு விலகி நேர்நிலையான, உறுதியான உணர்ச்சியான சந்தோஷத்தை நாம் நாட வேண்டும். “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெ.கே.8:10) அவர் சகலவிதமான ஆறுதலின் தேவன். அவரை நம்புங்கள்.. அவரில் மகிழுங்கள்… 

7. எண்ணங்களில் : நம் எண்ணங்களில் மாறுதல் தேவை. “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்று கட்டளையிடுகிறார் பவுல். (ரோ.12.2) இதுவரை இருந்த பிரச்சனைகளைக் கண்டு, முறுமுறுக்கிற கட்டத்திலிந்து நகர்ந்து, ஸ்தோத்திர கட்டத்துக்கு மாறுங்கள். முறுமுறுத்தது போதும். மாறாக, நன்றி சொல்லும் கட்டத்திற்குள் வாருங்கள்.. உங்கள் பிள்ளைகள் இன்று நன்றாயிருக்கிறார்களே… துதிக்க வேண்டும்.. அப்பொழுது மன நிறைவோடும், இன்னும் மகிழ்ச்சியாயும் வாழலாம்.

“…நீ பண்ண வேண்டிய பிரயாணம் வெகுதூரம்..” (1 ராஜாக்கள் 19:7)


A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.