நானும் என் டீன் ஏஜ் மகள் சுஜாதாவும்
திருமதி ஞானம் ராஜாசிங்
Family Pages Article Image

கேள்வி-பதில் பகுதி

 

கேள்வி

நானும் என் டீன் ஏஜ் மகள் சுஜாதாவும் சில வேளைகளில் வாக்குவாதம் வந்து சண்டைப் போட்டுக்கொள்கிறோம்.  அது போன்ற சமயங்களில் என்னை என் மகள் திட்டுவது போல யாரும் என் மீது கடுஞ்சொற்களை இந்த அளவு உபயோகப் படுத்தியது இல்லை. இவ்விதமான சண்டைகளை குறைக்க அல்லது அடியோடு நிறுத்த ஏதாவது வழி சொல்லுங்களேன்.

 

பதில்

அன்புள்ள சுஜாதாவின் தாயாகிய உங்களை வாழ்த்துகிறோம். இளம் வாலிபப் பிள்ளைகள் இருக்கின்ற அத்தனை வீடுகளிலும் தங்களைப் போல எழும்புவதை யாரும் மறுக்க முடியாதே. வேகமாய் வளர்ந்து வருகின்ற இளம் வாலிபர்களுக்கு ( Teens) இருக்கின்ற கேள்விகள், குழப்பங்கள், தோல்விகள், ஏக்கங்கள் வேறு யாருக்கும் கிடையாது. எனவே பரிதாபப் பட வேண்டியது இளம் வாலிபர் ( Teens) தான். சென்னையில் உள்ள Shalom Family Enrichment Ministries ஊழியத்தின் மூலமாக தேவன் பயன்படுத்தி வரும் Aunty Gnam Rajasingh அவர்கள் தங்களின் அனுபவத்தினாலும், 3 பிள்ளைகள் வளர்த்த பங்கினாலும் எழுதிய ஆலோசனைகளை கீழே தருகிறோம்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.


1. தங்களின் இளம் வாலிபப் பிள்பளைகள் பேசுவதை காதால் மட்டுமில்லாது கண்ணாலும் “கேட்க வேண்டும்”.

2. அவர்களோடு சேர்ந்து எதையாவது செய்தல் நல்லது

3. நம் பிள்ளைகள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆலோசனை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. அவர்களுடைய நண்பர்களை கண்டிப்பாய் மதிக்க வேண்டும்.

5. பிள்ளைகளின் இரகசியங்களைப் பாதுகாக்க வேண்டும்

6. நம்முடைய தவறுகளை அவர்களிடம் ஒத்துக் கொள்வது அவசியம்

7. அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை நிறுத்திவிட்டு, அவர்கள் காதுகள் கேட்க அவர்களைப் பாராட்ட வேண்டும்.

8. இளம் வாலிபப் பிள்பளைகளின் சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பியுங்கள்

9. அவர்களாகவே தீர்மானம் எடுக்க அனுமதியுங்கள்

10. கொஞ்சம் விட்டுக் கொடுக்கப் பழகுங்கள்

11.“நீ தப்பு செய்தாய்” என்று அவர்களைச் சுட்டிக் காட்டாமல், “எனக்கு வருத்தம்”, “நான் துக்கப் பட்டேன்” என்று பேசப் பழக வேண்டும்

12. பிள்ளைகளை ஒரு போதும் சபிக்காதீர்கள்

13. இந்த வயதில் அவர்களை அடிப்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். நண்பராக/ சிநேகிதியாக பார்க்க வேண்டும்.


திருமதி ஞானம் ராஜாசிங் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் ஊழியத்தை செய்து கொண்டு வருபவர். 29 ஆண்டுகளகளாக 'Scripture Union'ல் இருந்த இவர் "Shalom Family Enrichment Ministries" மூலமாக குடும்பங்கள் மத்தியில் ஊழியத்தை தொடர்ந்து செய்கின்றார். 91- 9382720809 என்ற தொலைபேசி எண் மூலமாக இவரை தொடர்பு கொள்ளலாம்.