கூட்டலும் கழித்தலும்
Shalom Family Enrichment Ministries
Family Pages Article Image

உங்கள் வாழ்க்கை இனியதாக அமைய சில கூட்டல்களும், கழித்தல்களும்..

1. கணவன் மனைவியிடையே ‘வென்றிடும் எண்ணம் வேண்டாம்.. விட்டுக் கொடுப்பதே கூட்டல்!

2. மனைவி / கணவருக்கு பிடிக்காத முன் நாளின் சிநேதிதர் /சிநேகிதிகளை கழித்து விட வேண்டும்!

3. ‘நான் தனிமையில்தான் இருப்பேன்’ என்ற எண்ணத்தைக் கழித்துவிட்டு, கணவர்/ மனைவியின் புதிய உறவுக்காக நேரத்தை கூட்டிக் கொள்ளுங்கள்!

4. மனைவி / கணவர் தூங்கச் செல்லும்போது தானும் தூங்கச் செல்வது சாலச் சிறந்தது. இரவில் தனிமையில் உட்கார்ந்து டிவி பார்ப்பதை கழித்து விட வேண்டு;ம்!

5. தன் கணவர்/தன் மனைவி மனதிற்கும் கண்களுக்கும் பிடித்தமான உடைகளையே அணிய வேண்டும். பிடித்தமில்லாத, நாற்றம் எடுக்கக் கூடிய, நலிந்த, கிழிந்த, கவர்ச்சியற்ற உடைகளை வீடுகளில் அசட்டையாக அணிவதை கழித்து விட வேண்டும்!

6. ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், விசுவாசம், இச்சையடக்கம் ஆகியவற்றை கூட்டிக் கொள்ள மறக்க வேண்டாம்!

7. கோபம், சோம்பல், குறை சொல்லுதல், கடுகடுப்பாய் பேசுதல், ஒருவரையொருவர் மட்டம் தட்டுதல், விரோதங்கள், வேசித்தனங்கள், வைராக்கியங்கள், சண்டைகள், பொறாமைகள், களியாட்டுகள் ஆகியவற்றைக் கழித்துக் கொள்ளுங்கள்!

8. பொழுதுபோக்கு, டிவி, நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது போன்றவைகளைக் கழித்து மனைவியோடும், பிள்ளைகளோடும் மற்றும் உடன் இருக்கும் பெற்றோர்களோடும் செலவிடும் நேரங்கள் கூட்டப்பட வேண்டும். இதுதான் குடும்பச் சொத்து!.

9. அடிக்கடி, தனியே ஹோட்டல் செல்வதைத் தவிர்த்து, மனைவிக்கு சமையல் செய்வதில் உதவி செய்து, வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு மகிழலாமே! செலவும் மிச்சமாகும்.. மனைவியுடன் செலவிடும் நேரமும் கூடும்.. அத்துடன், சமையலும் ஒரு இனிய பொழுதுபோக்காக மாறும்.. இது ஒரு கூட்டலே!

10.  எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனோடு குடும்பமாய் செலவிடும் ஜெப நேரத்தையும், தேவனுக்காக செலவிடும் ஊழிய நேரத்தையும் கூட்டிக் கொள்ளுங்கள்.. இது ஆசீர்வாதமே!


A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.