புகழின் உச்சி
Mr.Arul Manohar
Family Pages Article Image

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஒருவர் ஒரு நாள் சோர்வுடன் தன் வீட்டுத்தோட்டத்தில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.தன் வாழ்க்கையில் சாதிக்கவேண்டியவற்றையெல்லாம் சாதித்து விட்டாலும் அவருக்குள் ஒரு சோர்வு. அப்போது அந்த தோட்ட்த்தில் இருந்த  குளத்தின் நடுவில் இருந்த தொட்டியின் மீது அவர் கவனம் திரும்பியது. அதில் இருந்த செடியின் மீது  ஒரு நத்தை மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் செடியின் உச்சியை அடைந்த நத்தை மேலும் ஏற முடியுமா என்ற பெருமையுடன் சுற்றும் முற்றும் பார்த்தது. வழியில்லாததால் தான் வந்த வழியிலேயே மெதுவாக இறங்கி, தண்ணீருக்குள் மீண்டும் சென்றுவிட்டது.

மனிதனின் வாழ்க்கையும் இப்படித்தான். பல வெற்றிகளை அடைந்து புகழின் உச்சியை அடைந்தாலும் அது அவனுக்குத் திருப்தியைத் தருவதில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு என்பதையும்,தான் ஒரு மனிதனே என்பதையும் அவன் உணர வேண்டியதிருக்கிறது.இதை மறந்து, தற்பெருமையுடன் கடவுளை உதறித்தள்ளுவது அழிவைத்தரும்.

"மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை" நீதி 27:21


Mr.Arul Manohar with heart to Serve Lord has been in the ministry for over 2 decades. Working at Evangelical Union ( EU ), was the editor for their Tamil Magazine and their National English Magazine. Now he is Serving the Lord as General Secretary of Evangelical Union.