பரிசுத்த வேதாகமத்தில் 1189 அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வோரு அதிகாரத்திலும் ஏதாவது ஒரு செய்தி முக்கியமாக அல்லது பிரதானமாக் காணப்படுகிறது.அதைக் கண்டுபிடித்து அதைத் தலைப்பாக அதிகாரத்தின் ஆரம்பத்தில் எழுதிக்கொள்ள் வேண்டும். அந்தத் தலைப்பை மனதில் நன்றாக பதித்துக் கொள்ள வேண்டும். வேதாகமத்திலுள்ள பகுதிகளை எளிதாக நினைவிற்கு கொண்டுவர இது மிகவும் உதவியாக இருக்கிறது.
நீங்கள் வேதாகமத்தில் ஒரு அதிகாரத்தை வாசிக்கும்போது எப்பொழுதும் கீழ்க்காணும் நான்கு குறிப்புகளை மனதில் கொண்டு வாசிக்கவும். இந்த ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில்களை கண்டுபிடிக்கும் வகையில் வாசிப்பீர்கள் என்றால் நீங்கள் வேதத்தை வாசிப்பது பயனுள்ள ஒரு அனுபவமாக மாறிவிடும்.
1. முக்கிய செய்தி என்ன?
2. பத்திப் பிரிவுகள் யாவை?
உதாரணம் : 1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரத்தை 3 பத்திகளாக பிரிக்கலாம்.
அன்பு எனக்கிராவிட்டால் 1- 3
அன்பின் தன்மைகள் 4 - 7
அன்பே சிறந்தது, பெரியது 8 - 13
3. உங்களுக்கு பிரியமான வசனம் எது?
4. உங்களுக்கு புரியாத வார்த்தை எது?