குடும்பம் என்பது நம்முடைய சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் ஒரு அடிப்படை. குடும்ப உறவுகள் தளர்ந்து சோர்வடையும் போது, அது சமுதாயத்தையும் தளர்ந்த நிலைக்கு தள்ளிவிடுகிறது. வீடு பலமிழந்து போகும் போது, அதில் உருவாக்கப்படும் நாளைய தலைமுறையும் பலமில்லாமல் வளர்கின்றது. இதில் சோகம் என்னவென்றால், இந்த இயங்காத தன்மை பல தலைமுறைகளை பாதிக்க கூடியவையாக இருக்கின்றது.
சமுதாயம் என்பது ஒரு பலமில்லாத குடும்ப்ப அளவிற்கு, பலமுல்ல தாக இருக்கின்றது. இதை ஒரு சைக்கிள் செயினுக்கு ஒப்பிடலாம். ஒரு பலமில்லாத அல்லது தேய்ந்து பொன இணைப்பு, மொத்த சங்கிலையையே அறுக்கு நிலைக்கு தள்ளிவிடும்.
குடும்பம் என்பது துணியில் இருக்கின்ற நூலைப் போன்றது. ஒரு நூல் அறுந்தால், அது சிறிய ஓட்டையை ஏற்படுத்துகின்றது. நிறைய நூல்கள் அறுந்தால், அந்த துணியே உபயோகமில்லாமல் போய் விடும். இதுபோன்று நிறைய குடும்பங்கள் காயப்பட்டு, உடைய ஆரம்பிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் சமுதாயமே சின்னாபின்னமாகிவிடும்.
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?. எப்படி பலமான மற்றும் நிலையான குடும்பங்களை உருவாக்கி, உறுதியான சமுதாயத்தையும் உலகத்தையும் காணப் போகிறோம்?
முதலில் நம்மிடத்தில் நாம் இதை தொடங்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குடும்ப உறவுகளை பலப்படுத்த வேண்டும் - கடமைகளை புதுப்பிக்க வேண்டும். குடும்பத்தை கட்டுவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் நாம் செய்ய வேண்டும்.
* உங்கள் பிள்ளைகளுக்கு குடும்பத்தின் பயன்களை ( Family values) போதியுங்கள்.
* மற்றவர்களுடன் பழகுகின்ற தன்மையை (relational skills) வளர்க்க உதவுங்கள்.
நீங்கள் ஞாயிறு வகுப்பு வாத்தியாரக இருக்கலாம், அல்லது போதகராக இருக்கலாம். ஆனால் முதலில் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஊழிய வேளைகளினால் நம்முடைய குடும்பம் உடைந்தால், அது நமக்கு மிகுந்த அழிவான சம்பவம்.
குடும்பம் என்பது ஒரு சிறு திருச்சபை. பலமுள்ள குடும்பங்கள், உறுதியான திருச்சபையை உருவாக்கும். அது ஒரு சாட்சியாக மாறுவது மட்டுமல்லாமல், இந்த உலகத்தின் மீது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.