"இரட்சிப்பு" என்ற வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முக்கியமான வார்த்தைகளில் ஒன்றாகும். இந்த வார்த்தை ஒரு முக்கியமான ஆன்மீக அனுபவத்தை விளக்குகிறது. "இரட்சிப்பு" என்ற வார்த்தையின் பொருள் "காப்பாற்றுதல்" அல்லது "தப்புவித்தல்" என்பதாகும். ஒவ்வொரு மனிதனும் பெற்றிருக்க வேண்டிய இந்த ஆவிக்குரிய அனுபவம் தேவனுடைய கிருபையால் கிடைக்கிறது.
இரட்சிக்க படுவதற்கு என்ன செய்ய வேண்டும்
1. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுதல்
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.-யோவான் 1:12
2. அவரை விசுவாசித்தல்
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் - அப்போஸ்தலர் 16:31
3. மனம் திரும்புதல்
உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். - அப்போஸ்தலர் 3:20
இந்த 3 படிகளும் ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையது. இந்த மூன்று தீர்மானங்களையும் எடுக்க தேவனே நமக்கு கிருபை கொடுக்கிறார்.