கிறிஸ்தவ தியானம்?
Dr. செல்வின்
Be Strong

கிறிஸ்தவ தியானம் என்றால் என்ன?

தியானம் என்பதை ருசியான உணவை சுவைத்து சாப்பிடுவதற்கு அல்லது மிருகம் அசைபோடுவதற்கு ஒப்பிடலாம். ஒரு வார்த்தையோ, கருத்தையோ மறுபடியும், மறுபடியும் பலவிதங்களில், பல கோணங்களில் சிந்தித்து, நினைவூட்டி மனதில் உட்கிரகிக்கும் செயல்முறையே தியானம் ஆகும்.

இன்றைய உலகில் யோகா, Transcendal Meditation போன்ற தியான முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. மனதை வெறுமையாக்கி, ஒருநிலைப் படுத்தும் முயற்சிகள் இவைகள். இது ஒருவேளை தற்காலிகமாக ஒருவருக்கு மன அமைதியையும், அலைமோதும் எண்ணங்களை மேற்கொள்ளும் சக்தியை கொடுத்தாலும், அது தேவனைவிட்டு தூரமன, தவறான வழிகளில் திருப்ப வழியை உண்டாக்குகிறது. மனம் வெறுமையாவதால் இருளின் அதிகாரங்களும், தீயசக்திகளும் தாக்குவதற்கு இடமுண்டாக்குகிறது. ஆதலால் இந்த முறைமைகளை விசுவாசிகள் பின்பற்றக் கூடாது.

கிறிஸ்தவ தியானம் : பயன்கள்

* தேவனைப் பற்றியும், நமது வாழ்க்கை நெறிகளைப் பற்றியும் வேதத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களையும், பேதங்களையும் ஆழமாக இடைபட்டு கற்றுக் கொள்ள கிறிஸ்தவ தியானம் மிகவும் உதவுகிறது.

* கலையுலக காட்சிகளில் வாழம் நமக்கு சினிமா, சின்னத்திரை மற்றும் மீடியா மூலமாக வரும் காட்சிகள் மனத்திரையில் நம்மையே அறியாமல் பதிந்துவிடும் அபாயம் நமக்கு உண்டு. அது நம்முடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் கறைப்படுத்தி, களங்கப்படுத்தி விடலாம். கிறிஸ்தவ தியான முறைகளை பழகிக் கொண்டு பின்பற்றுவது நாம் சுத்திகரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும், பலப்படவும் ஏதுவாகிறது.

* வேகமாக அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். எப்போழுதுமே ஓட்டம் தான். இந்த சூழ்நிலையிலும் கிறிஸ்தவ தியானம் தரித்திருந்து, காத்திருந்து கடைபிடிக்கக் கூடிய கட்டுப்பாடாக, பழக்கமாக இருக்கிறது. இது வாழ்க்கையை மேலோட்டமாக பாராது அவசியமானகைளை பகுத்தறிந்து தெரிந்து கொள்வதற்கு கவனம் செலுத்த உதவுகிறது.

* தனிமை உணர்வு, உறவ பிரச்சனை, டென்ஷன் நிறைந்த சூழ்நிலைகளில் உள்ள நாம் உள்ளான காயங்களில் இருந்து குணமாகவும், தேவையற்ற பாதிக்கக்கூடிய பழக்கவழக்க பிடிகளில் இருந்து விடுதலை பெறவும், பக்குவப்படுத்தவும் கிறிஸ்தவ தியானம் நமக்கு உதவுகிறது.

* கிறிஸ்தவ தியானம் வேதத்தை அடிப்படையாக் கொண்டு பரிசுத்த ஆவியானவரையே சார்ந்து செய்யப்படுவதால் அது உயிரோட்டம் கொடுக்கக்கூடியதும், உள்ளான ஆற்றல் அருளக் கூடியதும், தேவனோடு உள்ள உறவை உறுதிப் படுத்தக் கூடியதுமாய் இருக்கிறது.

* ஊழியத்தை திறமைகள், தாலந்துகளை மட்டும் சார்ந்து செய்யாமல் ஆவிக்குரிய தத்துவங்களின் அடிப்படையில் செய்த கிறிஸ்தவ தியானம் நம்மை ஆயத்தமாக்குகிறது.

* பல உபதேசங்கள் மனித அறிவிலும், சொந்த அனுபவத்தின் பின்னணியிலும் கொடுக்கப்படும் போது கிறிஸ்தவ தியானம்ஆவிக்குரிய அனுபவங்ளையும், வரங்களையும் வெளிப்பாடுகளையும் வேத வசன வழிகளில் செயல்படுத்தி, பக்திவிருந்தி உண்டாக்க பயன்படுகிறது.


Dr.Selwyn founder of Follow-up Ministries Trust, Oddanchatram ( India ), is a Bible Teacher and author of many christian books. Innovative and simplified bible teaching methods taught by him has helped many christians and non-believers alike to know more about God. He could be reached at 91-4553-240623.