மனப்பாடம் செய்வதில் என் அனுபவம்
Researching Bible

ஒரு முறை ஜெபத்தைப் பற்றிய 24 வசனங்களை மனப்பாடமாக சொல்ல சபை போதகர் விசுவாசிகளை உற்சாகப்படுத்த அறிவிப்பு கொடுத்தார்.

அந்த 24 வசனங்களையும் மனப்பாடமாக சொல்ல நான் விரும்பினேன். ஒரே நேரத்தில் என்னால் மனப்பாடமாகப் படிக்க முடியவில்லை. ஆனால், வேத வசனத்தின் மீதுள்ள ஆர்வத்தினாலும், மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினாலும் ஜெபத்துடன் சோர்ந்து போகாமல் விடா முயற்சியுடன் படித்தேன். நடு ராத்திரியில் கண்விழிக்கும் போதும் படித்ததை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்பேன். இப்படியாக படித்து 4 நிமிடங்களில் ஒரு தப்பும் இல்லாமல் மனப்பாடமாக சொல்ல தேவன் கிருபை செய்தார்.

 

-சகோதரி. ஜெயா சாந்தி
வேத வசனங்களை வேதபகுதிகளை மனப்பாடம் செய்வது எப்படி ( ஆசிரியர் : Dr. Selwyn ) என்ற புத்தகத்திலிருந்து