பரிசுத்த வேதாகமத்தை நீங்கள் ஆராயும்போது பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும், ஜெபத்துடனும் பலமுறை வாசிக்க வேண்டும்.
வேதாகமத்தில் அடிக்கோடிடுவதும், குறிப்பிட்டுக் கொள்வதும், எழுதிக் கொள்வதும் அவசியம்.
ஒரு நோட்டில் தொடர்ந்து குறிப்புகளை எழுதிக் கொள்வது மிகவும் அவசியம்.
வேதாகமத்தில் சரித்திரம், செய்யுள், தீர்க்க தரிசனம் என்ற வெவ்வேறு இலக்கிய நடையுள்ள பகுதிகள் உள்ளன. ஆகவே ஒவ்வொரு பகுதியைப் படிக்கும் போதும் வித்தியாசமான கண்ணோட்டத்துடனும் அணுகுமுறையுடனும் படிக்க வேண்டும்.
வேதாகமத்தை ஆராயும்போது ஒரு இடத்தின் பெயரோ அல்லது பகுதியின் பெயரோ வந்தால் வேதாகம் நாடுகளின் தேச வரைபடத்தை எடுத்துப் பார்க்க வேண்டும்.