பல சமயங்களில் ஜெபிக்கும்போதும், வேத வசனதியானத்தின்போதும் மனதை ஒருமுகப்படுத்த சிரமங்கள் வரலாம். எண்ணங்கள் பல திசைகளில் சிதறலாம். செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்த எண்ணங்கள் வந்துகொண்டிருக்கலாம். தேவையற்ற எண்ணங்கள் மனதிற்குள் தொடர்ந்து வரலாம். எண்ணங்கள் மனதிற்குள் வந்து போவதை தடுக்க முடியாது, நிறுத்த முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மனதை ஒருமுகப்படுத்த பழகிக் கொண்டால் மற்ற எண்ணங்களுக்கு கவனம் செலுத்தாமல் சீராக ஜெபிக்கமுடியும். ஆரம்பத்தில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் மட்டும் ஜெபிக்க முடியும். ஆனால் தொடர்ந்த பயிற்சினாலும் நீண்ட கால பழக்கத்தினாலும் இவை சாத்தியமாகும். செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய எண்ணங்கள் வந்தால் ஒரு பேப்பரிலோ (அ) நோட்டிலோ வரிசையாக எழுதிக்கொள்ளலாம். ஓவ்வொரு வேலையிலும் ஆண்டவர் கிருபையும் ஞானமும் தர ஜெபிக்கலாம். எழுதியபின் அந்த எண்ணங்கள் வராது. தேவையற்ற எண்ணங்கள் வரும்போது பாடல்களைப் பாடலாம், வேத வசனங்களை சொல்லிப் பார்க்கலாம். சோதனையான காரியங்கள் வரும்போது இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லும் போது நமக்கு ஜெயம் கிடைக்கும். அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை ஸ்தோத்திரபலி அப்பா அப்பா உங்களுக்குத்தான்
|