கதாகாலட்சேபம் :அப்பங்களை கொடுத்த சிறுவன்
திரு.கிறிஸ்துதாஸ்
Reaching out people

இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். அவர் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார். பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக,கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.

இந்த சம்பவம் நடந்த கால கட்டங்களில், ஒரு பணம் என்பது, ஒரு நாளைக்கு திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்தால் கிடைக்கும் கூலி. ஆகவே அங்கு கூடியிருந்த மக்களுக்கு உணவு வாங்க வேண்டுமென்றால், 6 மாதம் வேலை செய்த பணமும் போதாமல் போய்விடும், என்பது பிலிப்புவின் கூற்று.

இதனை பிண்ணனியாக கொண்டு "பெயர் தெரியாத பெரியோர்கள்" என்ற தலைப்பின் உருவான  கதாகாலட்சேபத்தை கேட்க கீழே உள்ள பிளே (Play) என்ற பட்டனை அழுத்தம் செய்யவும்.


 


திரு.கிறிஸ்துதாஸ். அவர்கள், "தக்கலை கல்வாரி நற்செய்திக் குழு" என்னும் இசைக்குழுவை நிறுவி, தமிழ் நாட்டில் 'இசைவழி நற்செய்தியை.அளித்து வந்தவர். ஆங்கில புத்தகங்களை தமிழாக்கம் செய்வது மட்டுமல்லாமல், 'சிலுவையில் இயேசு' என்ற நூலையும் எழுதியுள்ளார்.