"சுவிசேஷகன்" பிலிப்பு
அப்போஸ்தல நடபடிகளில் 6ம் அதிகாரத்தில் 5ம் வசனத்தில் விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்த புகழ்பெற்ற ஏழு பேரில் ஒருவனாகக் குறிப்பிடப் பட்டவன். வழியிலே ஆவியானவர் சொன்னபடி எத்தியோப்பிய ஸ்திரியின் மந்திரியும், அவளுடைய பொக்கிஷம் எல்லாவற்றிற்கும் தலைவனாயிருந்த எத்தியோப்பியனுக்கு சுவிஷேசம் சொல்லி இரட்சிப்புக்குள் நடத்தி ஞானஸ்தானம் கொடுத்தவன். சாதாரண கிறிஸ்தவனாய் வாழ்ந்து, இரண்டாந்தரம் என்னப்படுகிற "பந்தி விசாரணை" ஊழியத்தை நன்கு செய்து, சுவிசேஷகனாய் மாறி வெளி நாட்டு மிஷினரியாய் ஊழியம் செய்த பிலிப்பு, வேதாகமத்தில் "சுவிசேஷகன்" என்றழைக்கப்பட்ட ஒரே மனிதன்.
- - Gospel Mail நற்செய்தி மலர்( தமிழ் நாடு சுவிசேஷக்குழு ) என்ற இதழிலிருந்து
யோவானின் சிறை
யோவான் ஸ்நானகனை ஏரோது சிறைவைத்திருந்த இடத்திற்கு மக்காயரஸ் என்று பெயர். இக்கோட்டையின் கீழ்புறம் நிறைய பாதாள அறைகள் கட்டப்பட்டு அவை சிறைச் சாலைகளாகப் பயன்படுத்தப் பட்டன. இந்த மக்காயரஸ் கோட்டை சவக்கடலின் வடக்கு கோடியில் உள்ள மோவாப் குன்றின் மேல் இருநூறு மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. பாழடைந்த நிலையில் இன்றும் இது காணப்படுகிறது.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.
புலம்பல் தீர்க்கதரிசி எரேமியா
புலம்பல் தீர்க்கதரிசி எரேமியா, பக்தியுள்ள ஆசாரியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் வாலிபனாக இருக்கும்போதே தீர்க்கதரிசியாய் வாழ அழைக்கப்பட்டார். ஆண்டவரின் கட்டளைப்படி இவர் திருமணம் செய்யவில்லை ( 16: 1 - 4 ). இவரது வாழ்க்கை, பாடுகள் நிறைந்ததாயிருந்தது. பிற தீர்க்கதரிசிகளை விட ஏரேமியா, தனது வாழ்க்கையையும், உணர்ச்சிகளையும் அதிகமாக தன் நூலில் எழுதுகிறார். ஆபத்திலிருந்து தப்ப ஒரே வழி தேவ சித்ததிற்கு அடிபணிவதே என்பதே இந்நூலின் அடிப்படை சத்தியமாகும்.
- - தின தியானம் (Publised by Scripture Union ) என்ற புத்தகத்திலிருந்து
யாகீஸ் - போவாஸ்
சாலமோன் ராஜா தான் முன் நின்று கட்டின தேவாலய வாசல் மண்டபத்தில் 18 முழ உயரமான இரண்டு பெரிய வெண்கல தூண்கள் நிறுத்தினான். ஓவ்வோரு தூணின் சுற்றளவு 12 முழ நூல் அளவாயிருந்தது. வலது புறத்திலுருந்த தூணுக்கு யாகீஸ் என்றும் இடது புறத்தில் இருந்த தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்.1 ராஜா 7: 15 - 21. யாகீஸ் என்கிற எபிரேயப் பதத்திற்கு Man of great power and wisdom என்றும் போவாஸ் என்கிற பதத்திற்கு Man of wealth என்றும் அர்த்தமாம். ரூத்தின் புஸ்தகத்தில் 2 ஆம் அதிகாரத்தில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரன் என்று எழுதப்பட்டுள்ளதை ஒப்பிட்டு பார்க்கவும்.
- - "சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து