Do You know

அதிக எண்ணிக்கையில் இடம் பெற்ற நகரங்கள்

வேதாகமத்தில் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்ற ஒரு நகரம் உண்டானால் அது எருசலேம் நகரமே. அதற்கு அடுத்ததாக அதிக இடத்தை பிடித்துக்கொண்ட இடத்தின் பெயர் சீயோன். மூன்றாவதாக பெத்தேல் ( ஆதி 18:19). சிமியோன் புத்திரருக்கு யோசுவா பங்கிட்டு தந்த பட்டணமாகிய பெத்தூலும் ( யோசு 19:4 ). அமலேக்கியரை முறியடித்த தாவீது அவர்களிடமிருந்து கொள்ளையாடின பொருள்களை பெத்தேல் நகரத்தாருக்கு வெகுமதியாய் கொடுத்தனுப்பினான் என்று வாசிக்கிறோம் அல்லவா ( 1 சாமு 30:27 ). இவ்விரண்டு பெத்தேலும், அந்த பெத்தேலை சேர்ந்தவைகள் அல்ல. அது வேறு இது வேறு.
- - "சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து


எசேக்கியேல்

எசேக்கியேல் ஆசாரிய வகுப்பைச் சேர்ந்தவராவார். பூசி என்று அழைக்கப்பட்ட இவருடைய தகப்பனாரும் ஆசாரியர் ஆவார். இவர் தீர்க்கதரிசன ஊழியத்திற்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பாபிலோன் தேசத்தில் கேபா நதிக்கரையில் அராபிய மொழியில் கிஃபில் என்றழைக்கப்பட்ட ஊரில் இவர் வாழ்ந்தார்.எசேக்கியேல் என்ற வார்த்தையின் பொருள் "தேவன் பெலப்படுத்துவார்" என்பதாகும்.
- - "தீர்க்கதரிசன புத்தகங்கள் ஓர் அறிமுகம்" ( எழுதியவர் : Dr. Selwyn ) என்ற புத்தகத்திலிருந்து


தமிழ் வேதாகம்

தமிழ் வேதாகம் பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ள 39 புஸ்தகங்களில் 929 அதிகாரங்களும் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள 27 புஸ்தகங்களில் 260 அதிகாரங்களும் காணப்படுகிறது. பழைய, புதிய இரண்டு ஏற்பாடுகளிலேயும் முறையே 592439 , 181253 வார்த்தைகள் அடங்கியுள்ளது. ஆக மொத்தம் 773692 வார்த்தைகள்.
- - "சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து


நியாயாதிபதிகள்

யோசுவா நூலிற்கு நேர் எதிர்மறையான நூல் நியாயாதிபதிகள் நூலாகும். யோசுவாவில் கீழ்படிதலுள்ள மக்கள் ஆண்டவரின் வல்லமையை நம்பி நாட்டை கைப்பற்றினர். ஆனால் நியாயாதிபதிகள் புத்தகத்தில் கீழ்ப்படியாத விக்கிரக வணக்கக்காரரான மக்கள் தேவனுக்கு எதிராக கலகம் செய்ததால் அடிக்கடி தோற்கடிக்கப்பட்டனர். இந்நூல் காட்டும் 400 வருடங்களில், ஆண்டவர் பலமுறை பகைவர்களிடமிருந்து அவர்களை பாதுகாக்க இரட்சகர்களை எழுப்பினார்.அவர்கள் மக்களை ஆண்டவர் பக்கம் திருப்பினாலும், சீக்கிரமாகவே அவர்கள் மீண்டும் தங்கள் பாவ வழிக்குத் திரும்பினர். எனவே இப்புத்தகத்திற்கு தோல்வியின் புத்தகம் என்பது சரியான பெயராக அமையும்.
- - தின தியானம் (Publised by Scripture Union ) என்ற புத்தகத்திலிருந்து