சாது சுந்தர் சிங்
இந்திய அப்போஸ்தலன் என்று அன்பாக அழைக்கபடும் சாது சுந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற ஊரில் 1889ம் ஆண்டில், செப்டம்பர் 3ஆம் தேதியில் பிறந்தார். சிம்லாவில் தனது 16-ஆவது வயதில் ஞானஸ்தானம் பெற்ற சாதுசிங்கை, அவரது உறவினர்கள் மிகவும் வெறுத்தனர். பல வழிகளில் அவரை துன்புறுத்தினர். இறுதியாக சுந்தர்சிங்கிற்கும் அவரது நண்பருக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்தனர். தேவ மகிமையால் சாது சுந்தர் சிங் உயிர்பிழைத்தார். ஆனால், அவரது நண்பர் மறுநாள் மரித்துவிட்டார்.
- - Gospel Mail நற்செய்தி மலர்( தமிழ் நாடு சுவிசேஷக்குழு ) என்ற இதழிலிருந்து
அதிகாரப் பிரிவுகள்
இன்று நாம் வேதத்தில் காணும் அதிகாரங்கள் மற்றும் வசன எண்கள் ஆகியவை கி.பி.1250 வரை இருக்கவில்லை. கி.பி.1250ல் தான் இப்படி வசனங்களுக்கு எண் கொடுத்தும், அதிகாரங்களுக்கு எண்ணிட்டும் பிரித்தார்கள். வேதத்தை இப்படி பிரித்தவர் கார்டினால் ஹ்யூகோ என்பவராவார். இவர் முதன் முதலில் லத்தீன் வேதாகமத்தில் தான் இதை உண்டாக்கினார்.தற்போதுள்ள அதிகாரப் பிரிவுகள் கி.பி.1553ல் தான் ஏற்படுத்த பட்டன. கிரேக்க மொழியின் வேதாகமத்தில் இப்பிரிவுகளை உண்டாக்கியவர் இராபர்ட் ஸ்டீபன் என்பவராவார்.
- -- வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.
முக்தி மிஷன்
கணவன் மரணத்திற்குப்பின் பெண்ணுக்கு வாழ்வு இல்லை என்று எண்ணப்பட்ட நேரத்தில், பெண்களின் விடுதலைக்காக போராட தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் தான் பண்டித ராமாபாய். 1858ல் மகாராஷ்டிராவில் பிறந்த இவர், தனது 24ஆவது வயதில் இரட்சிப்புக்குள் நடத்தப்பட்டார். இவரால் ஏற்படுத்தப் பட்ட ஸ்தாபனம் தான் முக்தி மிஷன். 2000-க்கு மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் அதில் பராமரிக்கப்பட்டனர். எல்லா பெண்களுக்கும் தையற்கலை, நெய்தல், பால்பண்ணை, கயிறு திரித்தல், வயல் மற்றும் தோட்ட வேலைகள் செய்தல் போன்ற வேலை வாய்ப்பும், குழந்தைகளுக்குக் கல்வியறிவும் கொடுக்கப்பட்டது.
- --மறக்க முடியாத மாமனிதர்கள் ( நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வெளியீடு)
நான்கு ஏரோதுகள்
1. யூதேயா தேசத்தை ஆண்ட ராஜா. இவனுடைய நாட்களில் தான், இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்யும்படி கட்டளை பிறப்பித்தவன் - லூக் 1:5, மத் 2:16
2. இயேசுவானவரை சிலுவை மரணத்துக்கு ஒப்புவித்தவன் - மத் 27
3. அப்பொஸ்தலனாகிய யாக்கோப்பை கொலை செய்ததவன் அப் 12
4. அப்பொஸ்தலனாகிய பவுலை நியாயம் விசாரித்தவன் - அப் 26
- -"சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து