Do You know

கை நனைக்க

திருமண காரியங்களில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் பெண் கேட்கப் போகும் சமயத்தில் பெண்ணைப் பிடித்திருந்தாலோ அல்லது பெண்ணை தருவதற்கு பெண் வீட்டார் மனப்பூர்வமாய் சம்மதித்தாலோ அதன் பிறகே மாப்பிள்ளைவீட்டார் அந்த வீட்டில் கை நனைக்க சம்மதிப்பார்கள். அதாவது பெண் வீட்டார் தரும் ஆகாரத்தை சாப்பிட மனம் ஒப்புவார்கள். இது நேற்று இன்று உண்டான ஒன்றல்ல. ஆபிரகாமின் நாட்களிலேயே அதாவது ஏறத்தாழ 3800 வருஷங்களுக்கு முன்பே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆதி. 24:33,54 பெயர் செப்வும் ஆசியா கண்டத்திற்கு உட்பட்ட தேசமானபடியினால் நம்முடைய பழக்கவழக்கங்களுக்கு ஒத்ததாய் கானப்படுகிறது.
- --"சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து


மரியாளின் பயணம்

இயேசுவைக் கருவில் சுமந்த நிலையிலேயே யோசேப்புடன் மரியாள் நாசரேத்திலிருந்து பெத்லகேமிற்கு மூன்று நாள் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. இவர்களது பயணம் நாசரேத்திலிருந்து எஸ்டிரலோன் சமவெளி வழியாக சமாரியாவின் மலைகளை கடந்து பின்னர் யோர்தான் ஆற்றையும், பள்ளத்தாக்கையும் கடந்து எருசலேம் போக வேண்டும். வழியில் குள்ள நரிகளும், ஓநாய்களும் நிறைய உண்டு. இதுவும் தவிர கூட்டம் கூட்டமாய் கொள்ளையர்களும் இந்த வழிகளில் உண்டு. இயேசுவை கருவில் ஏற்றவர்களும், மனதில் ஏற்றவர்களும் சோதனையான பாதைகளை கடக்கத்தான் வேண்டும் இல்லையா?
- -- வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


கலாத்தியா

கலாத்தியா என்பது ஒரு பிரதேசம் அல்லது பகுதியின் பெயராகும். இந்தப் பகுதி "சிறிய ஆசியா" என்றும் அழைக்கப்பட்டது. மத்தியதரைக் கடலுக்கு வடபகுதியில் இருந்த கலாத்தியாவில் தெர்பை, அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்பவைகள் முக்கியமான பட்டணங்களாகும்.பவுல் அப்போஸ்தலன் தனது முதலாவது மிஷனெரிப் பயணத்தில் இப்பகுதிகளுக்குச் சென்று, சுவிசேஷத்தை அறிவித்து விசுவாசிகளைச் சீஷராக்கி சபைகளை நாட்டினார்.
- - புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கான ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


சேர்ப்புப் பண்டிகை

சாமுவேல் பிறக்கும் முன்பாக அன்னாளும், எல்க்கானாவும் ஒரு பண்டிகை கொண்டாட ஆலயத்திற்கு போனார்களே. அது என்ன பண்டிகை தெரியுமா?. கூடாரப் பண்டிகை. இதற்கு சேர்ப்பு பண்டிகை என்ற ஒரு பெயரும் உண்டு. இது அக்டோபர் மாதம் நடைபெறும். இது அறுப்பின் பண்டிகையான போதிலும் இஸ்ரவேலர் வனாந்திரத்தில் கூடாரமிட்டு தங்கியதை நினைவு கூறுவதற்காகவும் கொண்டாடப் பட்டது.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.