Do You know

கால்டுவெல்

தமிழ் வேதத்தை மொழிபெயர்த்த குழுவில் முக்கிய இடம் பெற்றவர் கால்டுவெல் ஆவார். 1814ல் அயர்லாந்து நாட்டில் பிறந்து பின்னர் மிஷினரியாக தமிழ்நாடு வந்து நெல்லை மாவட்டத்தில் தொண்டாற்றிய இவருடைய பணி சாதாரணமல்ல. வேதத்தை மொழி பெயர்ப்பதில் பெரும் பணியாற்றியது மட்டுமன்றி, தமிழில் ஜெபப்புத்தகத்தையும், சபையின் அஸ்திபாரம் என்ற ஞானப்பாட்டையும் மொழி பெயர்த்த பெருமை இவரியே சாரும். இது மட்டுமன்றி, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல், நெல்லை பொது சரித்திரம் மற்றும் எஸ்.பி.ஜி. மிஷன வரலாறு போன்ற சிறந்த நூல்களையும் படைத்தார்.இடையன்குடியிலுள்ள சுவின்மிகு ஆலயம் கட்டப்பட்டதும் இவரால்தான். கால்டுவெல் 1891ம் ஆண்டில் கொடைக்கானலில் மரித்தார்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


பிரியமான வைத்தியனாகிய லூக்கா... கொலோ

பவுலின் கண்டிப்பான உபதேசங்களை பின்பற்ற முடியாதவர்களாய் அநேகர் அவரை விட்டு விலகிப்போனார்கள். 1திமோ 1:20, 2 தீமோ 1:15, 2:17, 4:10,20. ஆகிலும் லூக்கா போன்றவர்கள் அவரை விட்டு விலகாமல் அவரோடு இணைந்திருந்தது மாத்திரமல்ல. ஒரு உண்மை தேவ ஊழியனாய் விளங்க பண்ணினான். அவன் யூத மார்க்கத்தை சேர்ந்தவனுமல்ல, கிரேக்க வம்சா வழி வந்தவன் என்று சபை சரித்திரம் சொல்கிறது. ரோமா புரியில் உயர் பதவியில் இருந்த தெயோப்பிலு போன்றவர்களோடு ஈடுபாடு கொண்டிருந்த லூக்கா ஒரு வைத்தியன்.
- - "சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து


அந்திரேயா

மாற்கு எழுதின சுவிஷேசத்தில் உள்ள இயேசுவின் சீடர்கள் பட்டியலில் நான்காவது இடம் பெறும் பெயர் அந்திரேயா. அந்திரேயா என்ற கிரேக்க வார்த்தைக்கு ஆண்மை (Manly) என்ற பொருளுண்டு. கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா பட்டணத்தை சேர்ந்த அந்திரேயா, சீமோன் பேதுருவின் சகோதரன்.ஆனால், கப்பர் நகூமில் தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவோடு வாழ்ந்து வந்தான். பேதுருவைப் போல் மீன் பிடிக்கும் தொழிலை செய்தவன். யோவான் ஸ்நானன் "இதோ தேவா ஆட்டுக்குட்டி" என்று இயேசுவை அறிமுகம் செய்தபோது, யோவான் ஸ்நானனைப் பின் செல்வதை விட்டு இயேசுவைப் பின்பற்றலானான்.
- -- இறையரசில் இயேசுவின் சீடர்கள் ( இந்திய திருச்சபை வளர்ச்சி மிஷன் வெளியீடு) என்ற புத்தகத்திலிருந்து


இரண்டாவது இரத்த சாட்சி

ஸ்தேவான் கி.பி.34 இல் மரணமடைந்தபின் பிலிப்பு சமாரியா தேசத்துக்குக் கடந்து சென்று அங்கு பெரிய எழுப்புதலோடு கூட அதிசயங்களையும் அடையாளங்களையும் செய்தான். பின்பு துருக்கி மற்றும் சீர்யாவின் அநேக நகரங்களில் போதித்து சபைகளை நிறுவினான். இறுதியில் ப்ரைஜியாவிலுள்ள ஹைரபோலியாவிற்குச் சென்றான். கர்த்தர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்தும், அங்குள்ள விக்கிரக ஆராதனைக்காரர்கள் பிலிப்புவின் சுவிசேஷத்திற்கு செவிகொடுக்காதிருந்தனர். அங்கு கி.பி.51ல் அப்போஸ்தலனாகிய பிலிப்பு இரண்டாவது இரத்த சாட்சியாக மரித்தான்.
- - கேரீத் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு( FMPB) ஊழியத்தின் மாத இதழிலிருந்து