Do You know

அதிகாரப் பிரிவுகள்

இன்று நாம் வேதத்தில் காணும் அதிகாரங்கள் மற்றும் வசன எண்கள் ஆகியவை கி.பி.1250 வரை இருக்கவில்லை. கி.பி.1250ல் தான் இப்படி வசனங்களுக்கு எண் கொடுத்தும், அதிகாரங்களுக்கு எண்ணிட்டும் பிரித்தார்கள். வேதத்தை இப்படி பிரித்தவர் கார்டினால் ஹ்யூகோ என்பவராவார். இவர் முதன் முதலில் லத்தீன் வேதாகமத்தில் தான் இதை உண்டாக்கினார்.தற்போதுள்ள அதிகாரப் பிரிவுகள் கி.பி.1553ல் தான் ஏற்படுத்த பட்டன. கிரேக்க மொழியின் வேதாகமத்தில் இப்பிரிவுகளை உண்டாக்கியவர் இராபர்ட் ஸ்டீபன் என்பவராவார்.
- -- வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


உடன்படிக்கைப் பெட்டி

3 3/4 X 2 1/4 அடி X 2 1/4 அடி அளவிலான பெட்டி சீத்திம் மரத்தினால் செய்யப்பட்டு தங்கத்தினால் மூடப்பட்டிருந்தது. இதில் 10 கட்டளைகள் அடங்கிய 2 கற்பலகைகளும், மன்னா இருந்த பொற்பாத்திரமும், ஆரோனின் கோலும் இருந்தன. கிருபாசனம் என்ற முற்றிலும் பொன்னினால் செய்யப்பட்ட மூடியினால் இந்தப் பெட்டி மூடப்பட்டிருந்தது. அந்த மூடியோடே ஒரே வார்ப்பினால் செய்யப்பட்ட 2 கேருபீன்கள் அமைக்கப்படிருந்தன. 10 கட்டளைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் உள்ள பெட்டியின் மேல் கிருபாசனம் இருந்தது. இந்த அமைப்பானது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாகவும் கிருபையின் வெளிப்பாடாகவும் இருக்கிற கிறிஸ்துவுக்கு அடையாளமாக விளங்கினது.
- - சரித்திர புத்தகங்கள் ஒர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


கடைசி நியாயாயிபதியும் முதல் தீர்க்கதரிசியும்

எபிரெய வேதாகமத்தில் 1 & 2 சாமுவேல் புத்தகங்கள் ஒரே புத்தகமாக இருந்தன. 16ம் நூற்றாண்டில் தான் சாமுவேல் இரண்டு புத்தகங்களாக பிரிக்கப்பட்டது. 1 சாமுவேல் இஸ்ரவேலரின் தலைமைப் பதவி, நியாயாதிபகளிடமிருந்து இராஜாக்களுக்கு மாறியதை விளக்குகிறது. கடைசி நியாயாயிபதியும் முதல் தீர்க்கதரிசியும், இஸ்ரவேலின் முதல் அரசனான சவுலையும், அவனுக்குப் பின் அரசனான தாவீதையும் அபிஷேகம் செய்தவருமான சாமுவேலின் பெயர் இந்நூல்களுக்கு அளிக்கப்பட்டது பொருத்தமானதே.
- - தின தியானம் (Publised by Scripture Union ) என்ற புத்தகத்திலிருந்து


"சொப்பனங்களின் தீர்க்கதரிசி"

தானியேல் மாபெரும் ஜெபவீரர். சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும் வாழ்ந்தவர். தீர்க்கதரிசன வரம் பெற்றவர். "சொப்பனங்களின் தீர்க்கதரிசி" என்று இவர் அழைக்கப்பட்டார். தானியேல் என்றால் தேவன் என்னுடைய நீதிபதி ( தேவன் எனக்கு நியாயம் செய்கிறவர் ) என்று பொருளாகும். தானியேலைச் சிங்கக்கெபியில் போடும்போது அவர் சுமார் 90 வயதாயிருந்தார் என்பது குறிப்படத்தக்கது. தானியேல் வாழ்ந்த காலத்தில் தான் எசேக்கியேல் தீர்க்கதரிசியும் வாழ்ந்தார்.
- - "தீர்க்கதரிசன புத்தகங்கள் ஓர் அறிமுகம்" ( எழுதியவர் : Dr. Selwyn ) என்ற புத்தகத்திலிருந்து