Do You know

நான்கு ஏரோதுகள்

1.யூதேயா தேசத்தை ஆண்ட ராஜா. இவனுடைய நாட்களில் தான், இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்யும்படி கட்டளை பிறப்பித்தவன் - லூக் 1:5, மத் 2:16
2.இயேசுவானவரை சிலுவை மரணத்துக்கு ஒப்புவித்தவன் - மத் 27
3.அப்பொஸ்தலனாகிய யாக்கோப்பை கொலை செய்ததவன் அப் 12
4.அப்பொஸ்தலனாகிய பவுலை நியாயம் விசாரித்தவன் - அப் 26
- "சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து


ஏசாயா என்ற வார்த்தைக்கு

ஏசாயா என்ற வார்த்தைக்கு 'யெகோவா இரட்சிக்கிறார்' என்று பொருள். ஆமோத்தின் மகனான ஏசயா அரசப் பரம்பரையில் தோன்றியவர். ஏசாயாவின் மனைவியும் தீர்க்கதரிசன ஊழியத்தைச் செய்துவந்தார்.7:3, 8:3 வசனங்களை படித்துப் பாருங்கள். ஏசாயா எருசலேமில் வாழ்ந்தார்.
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுலைப் போல் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஏசாயா இருந்தார். சிறந்த இலக்கிய நடையில் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர். புதிய ஏற்பாட்டில் ஏசாயாவின் பெயர் 21 தடவைகள் வருகின்றன
- "தீர்க்கதரிசன புத்தகங்கள் ஓர் அறிமுகம்" ( ஆசிரியர் : Dr. Selwyn ) என்ற புத்தகத்திலுருந்து


பழி வாங்குதல் நமக்குரிய காரியமல்ல. அது ஆண்டவருக்குரியது ரோம் 12:19

முகாந்திரமில்லாமல் தன்னை கொலை செய்ய பிராயசப்பட்ட சவுலை கொல்லுவதற்கு தாவீதுக்கு அநேக நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. 1 சாமு 24:3 26:2,3,8. ஆகிலும் அவன் அந்த காரியத்தை தான் நடப்பியாதது மாத்திரமல்ல. மற்றவர்களை விட்டு செய்யவும் அவன் விரும்பவில்லை வச 4,7
- "சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து


நினிவே பட்டணம்

நினிவே பட்டணம் மகா பெரிய பட்டணமாக இருந்தது. இப்பட்டணத்தை சுற்றி வருவதற்கு 3 நாள் தேவைப் பட்டது. தேவனே இப்பட்டணத்தை மகா நகரம் என்று குறிப்பிட்டு, அப்படணத்தின் மக்கள் தொகையை எடுத்துச் சொன்னார். யோனா 4:11. இந்தப் பட்டணம் அசீரியா நாட்டின் தலைநகரமாக் விளங்கியது. இந்த பட்டணத்தில் வாழ்ந்த புறவினத்தாருக்கு எழுதப்பட்ட புத்தகங்கள் தான் யோனா மற்றும் நாகூம்.
- "தீர்க்கதரிசன புத்தகங்கள் ஓர் அறிமுகம்" ( ஆசிரியர் : Dr. Selwyn ) என்ற புத்தகத்திலுருந்து