Do You know

பிலேமோன்

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின 13 நிருபங்களில் இந்த ஒரு நிருபம் மட்டுமே பவுல் தன் நண்பருக்கு எழுதும் ஒரு தனிப்பட்ட கடிதம் ஆகும். இதை ஒரு சிபாரிசுக் கடிதம் என்று கூறலாம். பிலேமோன் என்பவருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் ஒநேசிமு என்பவரைப் பற்றி பரிந்துரைக்கும் கடிதம் இது.ஒரே அதிகாரத்தை கொண்ட 4 புத்தகங்களில் இதுவும் ஒன்று.
- - புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கான ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


சேவல் கூவும் நேரம்

மாற்கு 13:35ல் சேவல் கூவும் நேரம் என்ற பதம் காணப்படுகிறதல்லவா? அது குறிப்பாக எந்த நேரம் என்று தெரியுமா? அது அதிகாலை 2:30 மணியிலிருந்து 3:00 மணிவரைக்கும் இடையிலான நேரம். கிரேக்குவிலே இந்த நேரத்திற்கு "அலெக்டோரோபோனியா" என்று பெயர். இந்த நேரத்தில் தான் இரவுக் காவலர்கள், மூன்றாவது ஷிப்ட் மாற்றிக் கொள்வது வழக்கம்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


சமகால தீர்க்கதரிசிகள்

ஏசயாவும், மீகாவும் சம காலத்தில் வாழ்ந்த தீர்க்க தரிசிகளாவர் ( ஏசாயா 1:1, மீகா 1:1 ). இவர்கள் இருவரும் தங்கள் தீர்க்கதரிசனங்களை முக்கியமாக யூதாவிலும், எருசலேமிலும் உரைத்தார்கள் ( ஏசாயா 1:1) அதே காலத்தில் வடபகுதியாகிய இஸ்ரவேலில் ஆமோசும், ஓசியாவும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள் ( ஆமோஸ் 1:1; ஓசியா 1:1)
- - பழைய ஏற்பாடு ஓர் புத்தகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் )


யோவானும், பத்மு தீவும்

இயேசுவுக்கு அன்பான சீஷனாகிய யோவான், எபேசுவில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது, ரோமா புரிக்கு இழுத்துச் செல்லப்பட்டு கொதிக்கிற எண்ணையில் தூக்கிப் போடப்பட்டார். எந்தவித சேதமுமின்றி கர்த்தர் அவரை காத்தார். இராஜாவான தோமித்தியன் இதைக் கேள்விப்பட்டு பயந்து போய் பத்மு தீவுக்கு நாடு கடத்தினான். ஐக்கேரியன் கடலிலுள்ள மிகச்சிறிய தீவுதான் இந்த பத்முதீவு. சாமோஸ்க்கு 20 மைல் தூரம் தெற்கேயும், ஆசியா மைனருக்கு 24 மைல் மேற்கேயும் இந்த தீவு அமைந்திருந்தது. இங்கே வைத்துதான் வெளிப்படுத்தின விசேஷத்தை யோவான் எழுதினார்.
- - புதிய வானம், புதிய பூமி 1000 வருட அரசாட்சி ( ஆக்கியோன் : பாஸ்டர் S.ஞானமுத்து)