Do You know

பெத்லகேம்

இயேசு கிறிஸ்து பிறந்த ஊர் பெத்லகேம் யூதேயாவிலுள்ள மிகச் செழிப்பான ஊர்களில் இதுவும் ஒன்று. இவ்வூரில் வயல்கள் அதிகம். தானிய விளைச்சல் அபரிமிதமாயிருக்கும். எனவே தான் இதற்கு பெத்லகேம் என்ற பெயர் வழங்கியது. பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என்று பொருள். பெத்லகேமில் அக்காலத்தில் விடுதிகள் இருந்தாலும் அவை வசதியற்றவை. சுற்றிலும் கட்டிடங்களும் நடுவில் காலியிடமும் பொருந்தியது தான் பெத்லகேமின் விடுதி. இவ்வூரில் தெருவோரங்களிலுள்ள குன்றுகளில் சிறு குகைகளை உண்டாக்கி ஆடுமாடுகளை அடைக்க அவற்றை பயன்படுத்தினர். யோசேப்பிற்கு கிடைத்ததும், இப்படிப்பட்ட மாடு அடைக்கும் ஒரு குகை தான்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


தேயோப்பிலு

லூக்காவின் நண்பரான தேயோப்பிலு கண்ணியமான உயர்மட்ட அதிகாரியாயிருந்தார். இவருக்கு எழுதின புத்தகத் தொகுப்பின் முதல் பகுதிதான் லூக்கா சுவிசேஷம் ஆகும். இரண்டாவது பகுதி "அப்போஸ்தலருடைய நடபடிகள்". தேயோப்பிலு என்றால் இறைவனின் நண்பன் என்று பொருள். லூக்கா சுவிசேஷத்தின் முதல் அதிகாரம், முதல் வசனத்தையும், அப்போஸ்தலர் நடபடிகள் என்ற புத்தகத்தின் அதிகாரம், முதல் வசனத்தையும் கவனமாக ஒப்பிட்டு பாருங்கள்.
- - புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கான ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


இயேசு பிறந்த நாடு

இயேசு பிறந்த நாடு இப்போது பாலஸ்தீனா என்றும் இஸ்ரவேல் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தலைநகர் எருசலேம்.பரப்பளவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை விடச் சிறியது. வெறும் 20,770 ச.கி.மீ மட்டுமே. யூதர்களில் கிறிஸ்தவர்கள் குறைவு. இவர்களுடைய மதம் யூதமதம் எனப்படுகிறது. தற்சமயம் இங்கு ஜனங்கள் பெருவாரியாக எபிரெயு, அரபு மொழிகளை பேசுகின்றனர்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


அரசாட்சி முறை

கி.மு. 1050 இல் முதல் முறையாக இராஜாக்கள் ஆளும் அரசாட்சி முறை இஸ்ரவேல் தேசத்தில் அமுலானது. அது முதல் 3 இராஜாக்களான சவுல், தாவீது, சாலெமோன் ஆகிய ஒவ்வொருவரும் 40 ஆண்டுகள் அரசாட்சி செய்தனர். சாலெமோன் இராஜாவின் மகனான ரெகொபெயாம் என்பவருடைய காலத்தில் கி.மு.930இல் இஸ்ரவேல் ராஜ்யம் வடதிசை ராஜ்யம், தெந்திசை ராஜ்யம் என இரண்ட்டாக பிரிந்தது.
- - சரித்திர புத்தகங்கள் ஒர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து