Do You know

நான்கு சுவிசேஷங்களிலும்

நான்கு சுவிசேஷங்களிலும் மொத்தம் 89 அதிகாரங்கள் உள்ளன.
அதில்
4 அதிகாரங்கள் அவருடைய முதல் 30 வருட வாழ்க்கையைப் பற்றியும்,
85 அதிகாரங்கள் அவருடைய 3 வருட வாழ்க்கையைப் பற்றியும்
28 அதிகாரங்கள் அவருடைய கடைசி 8 நாள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன.
- --புதிய ஏற்பாடு ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


பர்னபாவும் பவுலும்

பர்னபாவின் இயற்பெயர் யோசே என்பதாகும். சீப்புருத் தீவை செர்ந்த இவர் லேவிக்கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் துவக்க காலத்தில் தனக்கென்று வைத்திருந்த நிலத்தை விற்று அப்போஸ்தலருக்கு கொடுத்திருந்தார். பவுல் மனம் திரும்பி அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து கொள்ள வந்தபோது அவரைக்கு குறித்து அவர்கள் பயந்திருந்ததினால் அவரை சேர்த்துக்கொள்ள மனதாயில்லாதிருந்த போது பர்னபாதான் அவர்களது பயத்தைப் போக்கி பவுலை அப்போஸ்தலர்களுடன் ஒப்புரவாக்கி சேர்த்துக் கொள்ளும்படிச் செய்தார். மாற்குவைப் பற்றி பர்னபாவுக்கும், பவுலுக்கு உண்டான வாக்குவாதத்திற்குப்பின் இருவரும் சேர்ந்து தேவப்பணி செய்யவில்லையாயினும், பர்னபாவைப் பற்றி பவுல் தன் நிருபங்களில் மிக உயர்வாகவே எழுதியுள்ளார்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


முதன் முதலில்

மரணத்தை சந்தித்த முதன் முதலன மனிதன் - ஆபெல் ஆதி 4:8
கோபம் கொண்ட முதல் மனிதன் - காயீன் - ஆதி 4:5
கானானுக்குள் அடியெடுத்து வைத்த முதல் ஊரின் பெயர் - கில்கால் - யோசு 4:19 - 20
பேதுருவை ஆண்டவர் முதல் முதலாய் சந்தித்த இடம் - கெனசரேத் கடல் - லூக் 5:1
ஆதி திருச்சபையால் முதல் முதலில் அனுப்பப்பட்ட மிஷனரிமார்கள் - பவுலும் பர்னபாவும் - அப் 13:2
- -- "சத்திய வேதாகம திறவுகோல்" ( ஆசிரியர் : Pastor Stephenraj ) என்ற பத்திரிக்கையிலிருந்து


மகா பரிசுத்த ஸ்தலமும் திரைச்சீலையும்

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், தேவன் மோசேக்கு காண்பித்து அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தில் பிரகாரம், வாசஸ்தலம், மகாபரிசுத்த ஸ்தலம் என்ற மூன்று முக்கியமான பகுதிகள் இருந்தன.மகாபரிசுத்த ஸ்தலம் என்கின்ற பகுதி, கூடாரத்தின் மேற்குப் பகுதியில் 15 அடி X 15 அடி X 15 அடி அளவில் திரைச் சீலைக்குப் பின்னாக அமைந்திருந்த பகுதி. இது தேவன் வாசம் செய்யும் இடத்திற்கு அடையாளமாக விளங்கியது. வருடத்திற்கு ஒரு முறைமட்டும் இதன் உள்ளே பிரதான ஆசாரியன் செல்லுவான். இதில் தான் உடன்படிகை பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.
சித்திர வேலைகளான திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையிலே இருந்தது. கிறிஸ்து சிலுவையில் மரித்த போது தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்தது. தேவனிடத்தில் சேர நமக்கு வழி ஏற்பட்டது.
*எபிரெயர் 9ம் அதிகாரத்தைப் படித்துப்பாருங்கள்
- - சரித்திர புத்தகங்கள் ஒர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து