உங்களுடைய ஆவிக்குரிய வரங்களை அறிதல்
Rev.J.N. Manokaran
We have to Understand

ஆவிக்குரிய வரங்கள் என்பது நீங்கள் புதிதாய் பிறக்கும் அனுபவத்தை பெறும்போது பரிசுத்த ஆவியானவரால் தேவனுடைய ராஜ்ய நன்மைக்காக ஊழியம் செய்வதற்காகவும் திருச்சபையின் வளர்ச்சிக்காகவும் கொடுக்கப்படுகின்ற விசேஷித்த ஆற்றலாகும்.  பலவகையான வரங்கள் உண்டு.  ஆவிக்குரிய வரங்களை குறித்து அநேக வேதப்பகுதிகள் உள்ளன.  ரோமர் 12: 6-8; ஐ கொரிந்தியர் 12:4-11; 28-30; எபேசியர் 4: 7-13; I பேதுரு 4:10; I கொரிந்தியர் 7:13-14 மற்றும் எபேசியர் 3.  பழைய ஏற்பாட்டில் யாத்திராகமம் 3: 3-5 மற்றும் சங்கீதம் 150.

சிலர் நினைக்கின்றார்கள் இந்த வரங்கள் எல்லாம் அப்போஸ்தலர்களுடன் முடிந்து விட்டது என்று.  பவுல் இந்த பட்டியலை ஆலோசனையாக தந்திருகின்றாரே தவிர நிறைவடைந்துவிட்டது என்று கூறவில்லை.  தேவன் சில மக்களுக்கு பலவகையான வரங்களை தருகின்றார், ஆனால் அனைத்து விசுவாசிகளுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட வரங்களை தருகின்றார்.  ஒன்றைவிட ஒன்று சிறந்தது என்று கூறும் வகையில் எந்த வரங்களும் காணப்படவில்லை.  மிக முக்கியமானது தேவனுடைய சேவைக்காக முழுமனதுடனும் விருப்பத்துடனும் எதையும் மறைக்காமல் வரங்களை பயன்ப்படுத்த வேண்டும்.

ஆவிக்குரிய வரங்களின் பட்டியலை பூரணமாக தயாரிப்பது முடியாத ஒன்று ஆனால் பல்வேறு வேதப்பகுதிகளில் இருந்து ஒரு பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த பட்டியலை தயாரித்தவர் / உருவாக்கினவர் பீட்டர் வேக்னர்.

1. தீர்க்கதரிசனம் (பின்வரும் காரியங்களை சொல்லுதல், பிரசங்கித்தல்)
2. சேவை (ஊழியம்)
3. போதித்தல்
4. புத்தி கூறு. (விசுவாசத்தை எழுப்புதல், உற்சாகப்படுத்துதல்)
5. கொடுத்தல் (பங்களித்தல், தாராளமாக, பகிர்ந்து கொள்ளுதல்)
6. தலைமைத்துவம் (அதிகாரம், ஆளுகை, நிர்வாகித்தல்)
7. இறக்கம் (பரிதாபம், அரவணைத்தல், அன்பை காண்பித்தல்)
8. ஞானம் (ஞானமான ஆலோசனை, ஞானமான சொற்பொழிவு)
9. படிப்பு அறிவு (படித்தல், படிப்பறிவுடன் பேசுதல்)
10. விசுவாசம்
11. சுகமளித்தல்
12. அற்புதங்கள் (சிறந்த காரியம் செய்தல்)
13. ஆவிகளை பகுத்தறிதல் (ஆவிக்குரிய காரியங்களை விளக்குதல்)
14. அ;னிய பாஷை (கற்றிராத பாஷையில் பேசுதல்)
15. அன்னிய பாஷையை வியாக்கியாணம் செய்தல்.
16. அப்போஸ்தலர்
17. உதவி
18. நிர்வாகம் (அரசாங்கம், மற்றவர்களை ஒன்றுசேர்த்து வேலை செய்யவைப்பது)
19. சுவிசேஷகர்
20. போதகர் (தேவனுடைய மக்களுக்காக அக்கறை கொள்ளுதல்)
21. விவாகமாகாத நிலை
22. தன்னார்வர்
23. இரத்த சாட்சியாக மறித்தல்
24. உபசரித்தல்
25. மிஷ்னரி

மற்ற வரங்களும் இவருடைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
26. தொழில் திறமைவாய்ந்தவர்
27. மன்றாடுதல்

ஆவிக்குரிய வரங்களை பகுத்தறிதல் முக்கியமாக தேவைப்படுகின்றது,  பின்வருகின்ற மூன்று வழிகளில் ஒரு நபருடைய ஆவிக்குரிய வரங்களை கண்டுபிடிக்க முடியும்:

முதலாவது சில வகையான ஊழியங்களை செய்வதற்கு ஒருவர் உற்சாகமாகவும் மனதுருக்கத்துடனும் காணப்படுதல்.  சிலர் சிறு குழுவில் போதிகின்ற போது மனதுருக்கத்துடன் இருப்பார்கள், இன்னும் சிலர் பாடும் போதும் ஆராதனை நடத்தும் போதும் உற்சாகமாக இருப்பார்கள்.  சிலர் குழந்தைகள் உடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றார்கள். 

இரண்டாவதாக ஊழியத்தில் வெளிப்படுகின்ற கனியானது ஒரு நபரின் ஆவிக்குரிய வரங்களை குறிப்பிடுகின்றது.  சிலர் தனிநபர் சுவிசேஷம் கூறுவது மூலம் அநேகரை கிறிஸ்துவண்டை நடத்துகின்ற தாளந்து படைத்தவராக இருகின்றார்கள். 

மூன்றாவது பல்வேறு ஸ்தாபனங்கள் நம்மில் இருக்கின்ற ஆவிக்குரிய வரங்களை கண்டு கொள்வதற்கு பல்வேறு உபகரணங்களை (Tools) உருவாக்கி வைத்திருக்கின்றனர்..  பொதுவாக கேள்விகள் நம்மிடம் கேட்கப் பட்டு, அதன் பதில்கள் மூலம் நம்முடைய ஆவிக்குரிய வரங்கள் என்னவென்று அறிந்து கொள்ளமுடியும்.

ஆவிக்குரிய வரங்களை பகுத்தறிதல் என்பது மக்கள் தீர்மானம் எடுப்பதில் முக்கிய பங்கு வகிகின்றது.  சரியான நபரை சரியான பதவியில் வைப்பது மூலம் தேவனுடைய ராஜ்யத்தில் சிறப்பை கொண்டு வர முடியும்.  ஒரு மிஷ்னரி தன்னுடைய கல்லூரி நாட்களில் மொழியை படிப்பதில் சிறந்தவறாக இல்லை.  ஆனால் கிறிஸ்துவுக்குள் வந்தபிறகு ஆவிக்குரிய வரத்தின் மூலம் ஆறே மாதங்களில் அவர் மிஷ்னரியாக சென்ற பகுதியின் மொழியை கற்றுக்கொள்ள முடிந்தது.  அதன் மூலம் அங்கிருந்த மக்களுடன் இடைப்பட முடிந்தது.  இது இயற்கையாக வந்த தாளந்து இல்லை, ஆனால் ஆவிக்குரிய வரத்தின் உதவியால் அந்த மொழியை கற்றுக்கொள்ள முடிந்தது. வில்லியம் கேரி-க்கு பள்ளிப்படிப்பு சரிவர கிடைக்காதிருந்த போதும், அவரால் அநேக மொழிகளில் வல்லவராகவும் அந்த மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்க்கவும் முடிந்தது.


(தொடரும்)


Rev.Manokaran is a gifted Bible Teacher who regularly organizes and conducts programmes and Workshops for Pastors and Chruch Leaders. He could be reached at jnmanokaran@gmail.com.