நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்
அன்பு ஒளி
Bible

என் பெயர் அகஸ்டின் தேவதாஸ். கர்த்தரை நேசிக்கிற அருமையான அப்பா, அம்மா, ஒரு தங்கை. இதுதான் எங்கள் குடும்பம். ஓன்றுக்கும் குறைவில்லாமல் கர்த்தர் எங்களை நடத்தி வந்தார்.

நான் +2 படித்தபோது அந்த வயதுக்கேயுரிய குறும்புகள் நிறைந்தவனாகத் திரிந்த வந்தேன். பெற்றோர் சொல்லை மதிப்பதில்லை. எப்பொழுதும் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவது ஊதாரித்தனமாகச் செலவழிப்பதுமாய் பொழுது போக்கினேன்.

பெற்றோர் சொன்ன அறிவுரைகள் என் காதில் ஏறவில்லை. அவர்கள் என்மீது வைத்திருந்த செல்லத்தின் காரணமாக என்னைக் கடுமையாகக் கண்டிக்கவுமில்லை.

இந்த நிலையில் எனது காலாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் வந்தபோதுதான் எனது பரிதாபமான நிலை தெரிந்தது. நான் ஆறு பாடத்திலும் சேர்த்து நூறு மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தேன்.

என் பெற்றோர் மிகவும் வருந்தி எனக்காக மனஸ்தாபப்பட்டு ஜெயித்தனர். ஆனாலும் நானோ இதைப்பற்றி சிறிதளவும் அக்கறைப்படவில்லை.

ஒரு நாள் எங்கள் பள்ளியில் பணிபுரியம் ஆசிரியர் ஒருவர் என்னிடம் என் படிப்பு குறித்து விசாரித்தார். என்னுடைய நிலைமையை அறிந்து வேதனைப்பட்டார்.  உடனே என் வீட்டிற்கு வந்து எனக்காக ஜெபித்தார். ஏன் தந்தையிடம் என் நிலை குறித்து விசாரித்தார். அவரே என்னுடைய படிப்பிற்கும் பொறுப்பெடுத்துக் கொண்டார்.

தினமும் பள்ளி முடிந்ததும் எங்கள் வீடுவரை என்னோடு வருவார். வுந்து சிறிது நேரம் என்னைப் படிக்கவைப்பார். பிற பாடங்களுக்கும் அவரே சிறந்த ஆசிரியர்களை ஒழுங்கு செய்து படிக்க வைத்தார். ஆனாலும் நான் மாறாமல் அப்படியேதான் இருந்தேன்.

தினந்தோறும் எனக்கு அவர் இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி எடுத்துரைப்பார். அறிவுரைகளும் கூறுவார். ஒரு நாள் அவர் கூறிய வார்த்தைகள் என்னைச் சிந்திக்க வைத்தன.

“தம்பி, உன் முன் இப்போது இரண்டு பாதைகள் இருக்கின்றன. இவற்றுள் ஒன்றினைத் தெரிந்து கொள். ஓன்று இப்பொழுது நீ சென்று கொண்டிருக்கும் பாதை. இது இப்பொழுது உனக்கு மகிழ்ச்சியைத் தருவதுபோல இருக்கும். ஆனால் முடிவு பரிதாபமாக இருக்கும்.

மற்றொரு பாதை உண்டு. அது இப்பொழுது கொஞ்சம் கடினமானதாக இருக்கும். ஆனால் முடிவில் ஜெயமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். நீ எந்த வழியைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்?”என்று கோபமாகக் கேட்டார்.

இந்த வார்த்தைகள் என் உள்ளத்தை உடைத்தது. நான் எந்த வழியில் போவது? என்று ஜெபித்து சிந்திக்க ஆரம்பித்தேன். அவர் கூறிய இரண்டாவது வழிதான் என் வழியாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

காலையிலும் மாலையிலும் வேதம் வாசித்து ஜெயித்தேன். இரவும் பகலும் ஒழுங்காகப் படித்தேன். பெற்றோரை நேசிக்கத் தொடங்கினேன். என் வாழ்க்கை மாறியது. அந்த ஆண்டு இறுதித் தேர்வில் 65 சதவிகித மதிப்பெண் பெற்றேன். நல்லதொரு கல்லூரியில் கம்ப்யூட்டர் பிரிவில் சேர்ந்தேன். இன்று நான் ஒரு சாப்ட்வேர் இஞ்சினீயர். சமீபத்தில் எனக்குத் திருமணமானது. கர்த்தரை நேசிக்கிற ஒரு பெண் எனக்கு மனைவியானாள்.

என்னுடைய வாழ்க்கை இளைஞர்களுக்கு ஒரு பாடம். அன்று மட்டும் நான் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தால்… நினைக்கவே பயமாக இருக்கிறது.

அன்பான இளைஞனே! நீ எந்த வழியைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்? கர்த்தருடைய பாதை இடுக்கமானதாக இருந்தாலும் இறுதியில் இனிமையானதாக, வெற்றி சிறந்ததாக இருக்கும். இதுவே உன் பாதையாக இருக்கட்டும்.

அகஸ்டின் தேவதாஸ் - கோவை

“நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்” (ஏசாயா 61: 7)


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'

Social Share