தலைமைத்துவத்தின் நிலைகள் ( பாகம் : 4)
Rev.J.N. Manokaran
What God has in Store for you

நான்காவது நிலை (4) தலைவர்கள்

இந்த தலைவர்கள் அநேக உறுப்பினர்களுக்கு தலைமை போதகராகவும், அல்லது சபையின் அதிகாரியாகவும் அல்லது அநேக நிர்வாக செயலர்களுக்கு இயக்குநராகவும் அல்லது அநேக திருச்சபைகளுக்கு இயக்குநராகவும் இருப்பார்கள்.  அதிக எண்ணிக்கையுடைய மக்களை மேற்பார்வையிட்டு பரந்த அளவில் தாக்கத்தை உடையவராக இருப்பார்கள்.  இந்த தலைவர்கள் மற்றவர்களுக்கு தரிசனங்களை கொடுத்து, அவர்களை பெரிய காரியங்களை செய்ய சவால் விடுவார்கள்.  திருச்சபையின் அதிகாரியாகவும், அநேக நிர்வாக செயலர்களுக்கு இயக்குநராகவும் இருப்பார்களானால் அவர்கள் சொந்த அங்கத்தினர்களையும் தாண்டி தேசத்தின் பெரும் பகுதியின் மீது தாக்கம் உடையவராக இருப்பார்கள்.

ஐந்தாம் நிலை (5) தலைவர்கள்

5 நிலை தலைவர்கள் மோசே, பேராயர் அல்லது ஒரு பிரிஷனர்களுக்கே தலைமை இயக்குநர் அல்லது குழுவான திருச்சபைகளுக்கு தலைவர் போல் இருப்பார்கள்.  தேசம் முழுவதற்குமே பரந்த அளவு தரிசனத்தை உடையவர்கள் இவர்கள்.  புதிய காரியங்களுடன் தரிசனத்தை காண்கின்றவர்களாகவும் எந்த திசையில் செல்ல வேண்டும் என்கிற உணர்வை உடையவர்களாகவும் மேலும் விஸ்தாரமான பரந்த அளவு தாக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.  மற்றவர்களை உந்தி தள்ளுதல், தங்கள் தரிசனங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதும், திசைகளை அமைப்பதும் மற்றும் முன் நடத்துதலுமே இவர்களுடைய முக்கிய பொருப்புகளாகும்.


தலைமைத்துவத்தில் பல்வேறு நிலைகளின் பங்கு

பிறப்பு மற்றும் தன்மை: திருச்சபை வளர்ச்சி

திருச்சபையில் தலைமைத்துவத்தின் முதல் இரண்டு நிலைகளில் தேவனுடைய இராஜ்யத்தில் புதிய மக்களை கொண்டுவருவதே தீவரமாக செய்யப்படும்.  சமுதாயத்தில் சுவிசேஷப்பணி செய்து அதன் மூலம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை மக்கள் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள செய்வதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.  மேலும் புதிய சீஷர்களை அக்கறையுடன் போதித்து தேவனுடைய இராஜ்யத்தில் வளரவும் அவருடைய சித்தத்தை செய்யவும் உதவி செய்கின்றார்கள்.

வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியடைதல்: திருச்சபை ஆரோக்கியம்

தலைமைத்துவத்தின் மூன்றாவது நிலையினரின் நோக்கமானது புதிய விசுவாசிகளை திடமாக வளர செய்தலை உறுதிப்படுத்துவதாகும்.  ஆடுகளுக்கு நல்ல ஊட்டச்சத்தும் மருந்தும் கொடுத்து திருச்சபை ஆரோக்கியமாக இருத்தல்.  புதிய கிறிஸ்தவர்கள் குழந்தைகளை போலவே காணப்படாமல் அவர்கள் முதிர்ச்சியடைந்து பெரியவர்களாக நிலைத்திருக்க செய்தல்.  ஆட்டு தோல் போர்த்திய ஓநாய்களிடமிருந்தும், கள்ள போதகர்களிடமிருந்து ஆடுகளை பாதுகாத்து அழிவிலிருந்து விலக்க வேண்டும்.

தரிசனம் மற்றும் இயக்கம்:  திருச்சபை மற்றும் இராஜ்யம்

தலைமைத்துவத்தின் நான்கு மற்றும் ஐந்தாவது நிலையினர் தங்கள் சொந்த உறுப்பினர்களையும் தாண்டி பார்கின்றவர்கள்.  இவர்களின் தரிசனமானது ஓர் இடத்துடன் நின்றுவிடாமல் தேசத்தின் பல பகுதிகள், நாடு முழுவதற்கும், உலகலாவிய விதத்தில் நோக்க கூடிய வகையில் இருக்கும்.  இந்த தலைவர்கள் சமுதாயத்தில் ஒரு இன பிரிவினர்கள், சமுதாயம் மற்றும் தேசத்தில் உள்ள திருச்சபையின் அகன்ற பாகமாக பங்கு வகிக்கின்றவர்கள்.  இவர்கள் எல்லைகளையும் தாண்டி சுவிசேஷம் சென்றடையாத பகுதிகளையும் சென்றடைய திருச்சபைகளை ஊக்குவிக்கின்றவர்களாகவும் தேவன் அமைத்த இயக்கத்தில் அவர்களையும் பங்கடைய செய்வார்கள்.

தலைமைத்துவம் என்பது பல செய்கையின் ஒழுங்காகும்

தேவனுடைய திட்டத்தில் தலைமைத்துவ முன்னேற்றமானது பல செய்கைகளின் ஒழுங்காக உள்ளது (தொடர்ச்சியாக நடைபெறுவது).  ஒரு தலைவரானவர் முதல் நிலையில் சேவை மற்றும் ஊழியத்துடன் தொடங்க வேண்டும் பிறகு தேவன் தலைமைத்துவத்தில் அடுத்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பை தருவார்.  குறிப்பாக அனைவரும் ஐந்தாம் நிலை அல்லது நான்காம் நிலை தலைவராக முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  தேவனுடைய ராஜ்யத்தில் அவர் தன்னுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தேவனே சிலரை தேர்ந்தெடுத்து அடுத்த நிலைக்குள் கொண்டு செல்வார்.  சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் முதல் நிலை தலைவர்களாகவே சேவை செய்கிறவர்களாகவும் இருப்பார்கள்.


Rev.Manokaran is a gifted Bible Teacher who regularly organizes and conducts programmes and Workshops for Pastors and Chruch Leaders. He could be reached at jnmanokaran@gmail.com.

Social Share