பையன் மிகவும் அடம் பிடிக்கின்றான்
திருமதி ஞானம் ராஜாசிங்
Reaching out people

கேள்வி-பதில் பகுதி

கேள்வி
என்னுடைய ஆறு வயது பையன் சமீப காலமாக மிகவும் அடம் பிடிக்கின்றான். ஏதாவது அவன் கேட்டு கிடைக்காவிட்டால், தரையில் படுத்துக்கொண்டு ஊரையே கூட்டுமளவக்கும் சத்தம் போட்டு அழுகின்றான். முதலில் அவனை கண்டும் காணதது போல, இருந்தோம். ஆனால், அவனுடைய செய்கைகள் நின்ற பாடில்லை. இது என் கணவருக்கும் எனக்கும் ஒரு பெரிய போராட்டமாக இருக்கின்றது. இதற்கு ஆண்டி நீங்கள் தான் ஏதாவது வழி சொல்ல வேண்டும்.

- விகாலினி, தேயபுரம், இந்தியா

புதில்
ஆறு வயது பையன் சமீப காலமாக மிகவும் அடம் பிடிக்கிறான என்று  சொல்லி இருக்கிறீர்கள். சிறுவனாக இருக்கும் போது அப்படி இல்லை. இப்போது திடீரென்று புதிய பழக்கம் உண்டு என்று நினைக்கிறேன். எனவே சமீபத்தில் வீட்டில் ஏதாவது மாற்றங்கள் உண்டா என்று யோசித்துப் பாருங்;கள். இப்போது அவனுக்கு தம்பி அல்லது தங்கை பிறந்து இருக்கிறதா? அவனுக்கு நீங்கள் கொடுத்த நேரம், அன்பு பாதிக்கப்பட்டிருக்கலாம்.  அல்லது நீங்கள் வேலை நிமித்தம் அவனுக்கு நேரம் கொடுக்காமல் இருந்திருக்கலாம்.  அல்லது வேலை மாற்றலாகி புதிய பள்ளி, புதிய இடம் என்று அவன் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கவனியுங்கள். பொதுவாக பொதுவாக நம்முடைய கவனம் (Attention) குறையும்பொழுது, அதை மீண்டும் பெற்றுகொள்ள பிள்ளைகள் இன்றைக்கு இது மாதிரியான செயல்களை கையாளுகிறார்கள்.. மேலே உள்ள காரியங்களை அலசி பார்த்து அதிலே குறைவிருந்தால் சரிபடுத்த ஒரு சில தீர்மானங்களை எடுப்பது நல்லது.

இரண்டாவதாக அப்படியும் அவனுடைய அடம் அதிகமானால் ஒருமுறை   பிரம்பினால் முரட்டுத்தனமாக அல்ல அல்லது மென்மையாகவும் அல்ல சரியானபடி தண்டிப்பது நல்லது. மூன்றாவது தொடக்க நாட்களில் எளிதாக நினைத்துவிட்டு இருப்பீர்கள். இப்பொழுது கணவனும், மனைவியுமாக தொடர்ச்சியாக ஒரே சீராக ஒழுங்குபடுத்துவதில் கவனமாக இருக்க பிரயாசைப்படுங்கள்.  ஒழுங்குபடுத்தும் வேலையை கத்தாமல், அமைதியாக, நிதானமாக கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஒருசில வேளைகளில் கண்டிப்பதும் ஒருசில வேளைகளில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறு.   

கண்டிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அதிகமாக அவனிடம் அன்பு காட்டுங்கள்.

ஆறு வயது என்று சொல்லும் போது ஏற்கனவே நாம் ஒழுங்குபடுத்துவதில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம்.  

எனவே பெற்றோர் இருவரும் இதற்காக விஷேசித்து உபவாசத்தில் ஜெபிப்பது அவசியம். இது ஒரு அற்பமான காரியமோ, சிறிய காரியமோ அல்ல. அப்படி நாம் ஜெபிக்கும் போது உண்மை என்று ஆலோசனை சொல்லுவேன் என்று சொன்ன தேவன் உங்களுக்கு அவனை நடத்த ஆலோசனை தருவார்.     

விடாமுயற்சியோடும், விசுவாசத்தோடும் முன்னேறிச் செல்லுங்கள்.   

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் ( நீதிமொழிகள் 21:31 )

அன்புடன்

Aunty திருமதி ஞானம் ராஜாசிங்

( மேலே உள்ள கேள்வி பதிலி பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன))

 


 


திருமதி ஞானம் ராஜாசிங் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் ஊழியத்தை செய்து கொண்டு வருபவர். 29 ஆண்டுகளகளாக 'Scripture Union'ல் இருந்த இவர் "Shalom Family Enrichment Ministries" மூலமாக குடும்பங்கள் மத்தியில் ஊழியத்தை தொடர்ந்து செய்கின்றார். 91- 9382720809 என்ற தொலைபேசி எண் மூலமாக இவரை தொடர்பு கொள்ளலாம்.

Social Share