பல மாற்றங்கள் என் பையனிடம்
Reaching out people

கேள்வி-பதில் பகுதி

கேள்வி

என் பையனுக்கு 14 வயது ஆகின்றது. பல மாற்றங்கள் என் பையனிடம். பக்கத்து வீட்டில் 16 வயது பையன் இருக்கின்றான். சேஷ்டைகள், வம்புகளை விலைக்கு வாங்கும் அந்த பையனின் அம்மா/அப்பா படுகின்ற கஷ்டங்களை நான் கண்கூடாக காண்கின்றேன். இதே மாதிரி எங்கள் குடும்பத்திலும் நடந்து விடுமோ என்ற பயம் தான்.

உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கும், ஜோனியல் ராணி.

பதில்

வேகமாய் வளர்ந்து வருகின்ற இந்த உலகில்,  எதிர்ப்பார்ப்புகள் மாறும் சூழ்நிலையில், நம்முடைய சவால்களும் (Challenges ) மாறுவதை தடுக்க முடியாது. உங்கள் கேள்விக்கு பதிலாக,  சென்னையில் உள்ள Shalom Family Enrichment Ministries ஊழியத்தின் மூலமாக தேவன் பயன்படுத்தி வரும் Aunty Gnam Rajasingh அவர்கள் 3 பிள்ளைகள் வளர்த்த பங்கினாலும்,  20 வருட குடும்ப ஊழியத்தில் கிடைத்த அனுபவத்தினாலும்  எழுதிய ஆலோசனைகளை கீழே தருகிறோம்.

1. இளம் வாலிபப் பிள்ளைகள் பேசுவதை காதால் மட்டுமல்லாது கண்களாலும் ‘கேட்க வேண்டும்’.

2. அவர்களோடு சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும்.

3. நம் பிள்ளைகள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆலோசனைக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

4. அவர்களுடைய நண்பர்களை கண்டிப்பாக மதிக்க வேண்டும்.

5. பிள்ளைகளின் இரகசியங்களைப் பாதுகாக்க வேண்டும்.

6. நம்முடைய தவறுகளை அவர்களிடம் ஒத்துக் கொள்வது அவசியம்.

7. அவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதை நிறுத்திவிட்டு, அவர்கள் காதுகள் கேட்க அவர்களைப் பாராட்ட வேண்டும்.

8. இளம் வாலிபப் பிள்ளைகளின் சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பியுங்கள்.

9. அவர்களாகவே தீர்மானம் எடுக்க அனுமதியுங்கள்.

10. கொஞ்சம் விட்டுக் கொடுக்கப் பழகுங்கள்.

11. ‘நீ தவறு செய்தாய்’ என்று அவர்களைச் சுட்டிக் காட்டாமல், ‘எனக்கு வருத்தம்’ ‘நான் துக்கப் பட்டேன்’ என பேசப் பழகுங்கள்.

12. பிள்ளைகளை ஒருபோதும் சபிக்காதீர்கள்.

13. அடிப்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். நண்பராக/சிநேகிதியாக பழக வேண்டும்.Social Share