அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
Fr. Berchmans

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும் (2)
 
1.   முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே (2)
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே - (2)
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் .. இன்று (2)
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
 
2.   எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய் (2)
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - (2)
எங்களின் குற்றங்களை எரித்து விடும் - (2)
 
3.   ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் (2)
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - (2)
எங்களை அனுப்பும் தேசத்திற்கு - (2)
 
4.   அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே (2)
அன்னிய மொழியை பேச வைத்தீரே - (2)
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - (2)
 
5.   இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - (2)
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - (2)
எங்களை நிரப்பும் ஆவியினால் - (2)

 


Akkini Neruppaay Iranki Vaarum
Fr. Berchmans

Akkini Neruppaay Iranki Vaarum
Apishaekam Thanthu Vazhinataththum (2)
 
1. Mutseti Natuvae Thoenrineerae
Moesaeyai Azhaiththu Paesineerae (2)
Ekipthu Thaesaththirkuk Kuuttis Senreerae - (2)
Enkalai Nirappip Payanpatuththum .. Inru (2)
Akkini Neruppaay Iranki Vaarum
 
2. Eliyaavin Jepaththirku Pathil Thantheerae
Iranki Vantheer Akkiniyaay (2)
Iruntha Anaiththaiyum Sutteriththeerae - (2)
Enkalin Kurrankalai Eriththu Vitum - (2)
 
3. Aesaayaa Naavai Thottathu Poela
Enkalin Naavaith Thottarulum (2)
Yaarai Naan Anuppuvaen Enru Sonneerae - (2)
Enkalai Anuppum Thaesaththirku - (2)
 
4. Akkini Mayamaana Naavukalaaka
Appoesthalar Maelae Iranki Vantheerae (2)
Anniya Mozhiyai Paesa Vaiththeerae - (2)
Aaviyin Varankalaal Nirappineerae - (2)
 
5. Iravu Naeraththil Nerupputh Thuunaay
Isravael Janankalai Nataththineerae - (2)
Irunta Ulakaththil Um Siththam Seythita - (2)
Enkalai Nirappum Aaviyinaal - (2)