இயேசு அழைக்கிறார்
Bro.A.Stanley Chellappa
Song Birth

மத்தேயு 11:28
பாடல் : F.J. செல்லத்துரை
ராகம் : F.J. செல்லத்துரை.


சென்னை மெரினா கடற்கரை!

கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவித எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர் ! வியாதியுற்றோர், பிள்ளைப் பேறற்றோர், வேலை தேடி சோர்வுற்றோர், பிரச்சனைகளில் சிக்குண்டோர், தங்களுக்கு அருமையானவர்களை இழந்து, ஆறுதலின்றித் தவிப்போர், என, எண்ணற்ற தேவைகள், ஏக்கங்கள் நிறைந்த அக்கூட்டத்தில் தேவ செய்தியளிக்க வருகிறார் சகோதரர் அறிவர் D.G.S.தினகரன் !

இசைக்குழு மென்மையாய் இசைக்க, தனக்கு விருப்பமான இப்பாடலை இனிமையான குரலில் பாடுகிறார். தேற்றரவாளனாகிய து}ய ஆவியானவரின் பிரசன்னம் மைதானத்தை நிரப்புகிறது. ஆறுதலும், அற்புத சுகமும் ஆண்டவரிடமிருந்து அநேகர் பெற்று நன்றியுடன் தோத்தரிக்கின்றனர் !

உலகின் பல நாடுகளில், பல பட்டணங்களில் வல்லமை நிறைந்த அற்புத ஊழியத்தை தேவ பெலத்துடன் செய்துவரும் சகோதரர் தினகரனின் நற்செய்திப் பணிக்கு, அவர் தெரிந்து கொண்ட தலைப்பு, “இயேசு அழைக்கிறார்” ஊழியங்கள் !.

ஆம்! தேவ ஆசீர்வாதம் நிரம்பிய இவ்வூழியங்களுக்குப் பெயர் கொடுத்த இப்பாடலை சகோதரர் தினகரனே அவரது நற்செய்திக் கூட்டங்களில் பாடிப் பிரபலமாக்கினார். இப்பாடலைக் கேட்கும் எவரும் சகோதரர் தினகரனையும் அவரது அற்புத ஆறுதல் ஊழியங்களையும் நினைவுகூருமளவிற்கு, இப்பாடல் அவரோடு ஒன்றிவிட்டது. எனவே, அவரோடு இவ்வாறு நெருக்கமாக இணைந்த இப்பாடலை இயற்றியது அவரே என அநேகர் எண்ணியதில் வியப்பொன்றுமில்லை. இதினால், சகோதரர் தினகரனே இப்பாடலாசிரியரைத் தன் நற்செய்திக் கூட்டங்களில் அறிமுகம் செய்து வைத்தார்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இயேசுவின் அன்பையும், மனதுருக்கத்தையும் எளிய வார்த்தைகளுடன் அறிய உதவும் இப்பாடலை எழுதியவர் சகோதரர் கு.து. செல்லத்துரை ஆவார். இவர் ஜோதி-சைமன் தம்பதியருக்கு 26.08.1936 அன்று அரக்கோணத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அரக்கோணத்தில் முடித்து, பின்னர் சென்னையில் கல்லு}ரித் துவக்க வகுப்புவரை தொடர்ந்தார்.

சகோதரர் செல்லத்துரை 1972-ம் ஆண்டு ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். திருச்சபை மறுமலர்ச்சிப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பல திருச்சபைகளில் வேதபோதனை செய்தார். 02.07.1973 அன்று திருமணமான இவருக்கு ஒரு ஆண்மகனும், இரு பெண்பிள்ளைகளும் உண்டு. குடும்பமாக ஊழியத்தைத் தொடர்ந்த செல்லத்துரையை ஆவியானவர் பெலப்படுத்தி, பல பாடல்களுக்கான ராகங்களைத் தந்தார்.

மேனாட்டிசையில் அடிப்படைப் பயிற்சிபெற்ற சகோதரர் செல்லத்துரை ஒரு பாடகர் குழுவை அமைத்து பல நற்செய்திக் கூட்டங்களில் பாடல் ஆராதனையை முன்னின்று நடத்தினார். அக்கார்டியன், மவுத் ஆர்கன்;, மேண்டலின், மற்றும் கீ போர்டு வாசிப்பதில்  திறமை பெற்றவர். நற்செய்திக் கூட்டங்களில் பாடுவதற்கென தமிழிலும், தெலுங்கிலும் சேர்;ந்து மொத்தம் 150 பாடல்களை இயற்றி, ராகம் அமைத்திருக்கிறார்.

சகோதரர் செல்லத்துரை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த செக்கந்திராபாத்தை மையமாகக் கொண்டு தனது ஊழியத்கைதத் தொடர்ந்தார். 1975-ம் ஆண்டு, ஒரு முறை அவர் உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் இப்பாடலின் ராகத்தைதத் தந்தார்.  ராகத்திற்கேற்ற ஆறுதல் வார்த்தைகளுடன் இப்பாடலை இயற்றி, செக்கந்திரபாத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் முதன்முறையாகப் பாடினார். அப்போது கூட்டத்தில் அனைவரும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தனர். அன்றுமுதல் இப்பாடல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலையும், அற்புத சுகத்தையும் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொடுத்து வருகிறது. இச்சகோதரரின் சுகத்திற்காகவும், இவரது ஊழியங்களுக்காகவும் நாம் ஜெபிப்போமா?

இவரது முகவரி:-
சகோதரர்  F.J.  செல்லத்துரை
1-6-9ஃ10, ஃப்லாட் எண்.101,
ஸ்டெர்லிங் மெஜெஸ்டிக்,
வாக்கர் டவுன்,
செக்கந்திராபாத் - 500 003.
ஆந்திரப்பிரதேசம்
தொலைபேசி (040) 7672335

 


Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com