உங்களுக்காக ஒருவர் மரித்தார்.
Bro. Mohan C. Lazarus
Reaching out people

உங்களுக்காக ஒருவர் மரித்தார். நீங்கள் இதை அறியாமல் இருந்தாலும் உங்களுக்காக ஒருவர் மரித்தார்.

யார் இவர்? எப்படி மரித்தார்? அவரே உங்களை படைத்தவர். அவர் உங்களை மாத்திரமல்ல இந்த உலகத்தையே சிருஷ்டித்தவர். அவர் உங்களை நேசிக்கிறார். அவர் ஒருவரே உண்மையான கடவுள் அவர்தான் இயேசு கிறிஸ்து.

2000 வருடங்களுக்கு முன்பாக கொல்கொதா என்ற மலையில் எருசலேம் என்ற பேர் பெற்ற நகரில் மர சிலுவையில் 3 ஆணிகளால்  அடிக்கப்பட்டு அகோர மரணமடைந்தார்.

சிலுவை மரணம் ஒரு கொடூர தண்டனை. அன்றைய ரோமர் சாம்ராஜ்யத்தில் கொலை, கொள்ளை செய்தவர்களை இப்படி தண்டிப்பார்கள். ஒரு மனிதன் சிலுவை மரணத்துக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டால் காவலாளிகள் அவனை அடித்து, வேதனை உண்டாக்குவார்கள். அவர்களை எவ்வளவு கொடூரமாக தண்டித்தாலும் அவர்களுக்காக பரிந்து யாரும் வரமாட்டார்கள். கடைசியாக அவர் தோளில் சிலுவை சுமத்தி குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பின் அவன் ஆடைகளை களைந்து சிலுவையில் படுக்க வைத்து ஆணிகளைக் கொண்டு கைகளையும், பாதத்தையும் சிலுவையில் அடிப்பார்கள். பின்பு அந்த சிலுவையை அவர்கள் து}க்கி நிறுத்தும்போது அந்த உடல் ஆணிகளால் அடிக்கப்பட்டு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும். அப்போது அந்த மனிதன் தாங்க முடியாத வலி அனுபவித்து மூச்சுவிட திணறி ஒரு பக்கம் வேதனை அனுபவித்துக் கொண்டிருப்பான். இன்னொரு புறம் மக்கள் ஒரு கூட்டமாக நின்று அவனை பரிகசித்துக் கொண்டு அவன் வேதனையை ரசித்துக் கொண்டிருப்பார்கள். இதற்கிடையில் அந்த மனிதன் சிறுக சிறுக தன் உயிரை விட்டுக் கொண்டிருப்பான்.

இப்படிப்பட்ட அகோர மரணத்தை தான் இயேசு அனுபவித்தார். சிலுவையில் அவர் ஏன் இப்படி மரித்தார். என்ற கேள்வி நமக்குள் எழும்புகிறது அல்லவா?

1 பேது 2:22 அவரிடத்தில் பாவம் இலலை அவர் வாயில் அநியாயம் இல்லை என்று சொல்லுகிறது. அவர் யாரையும் துன்புறுத்தவில்லை அவர் இரவும் பகலும் மக்களுக்கு நன்மை செய்தார். பாவமே செய்யாமல் நன்மை செய்த இயேசு ஏன் இப்படி சிலுவையில் பாடுபட வேண்டும் என்று யோசிக்கின்றீர்கள் அல்லவா? அவர் உங்களுக்காகத்தான் சிலுவையில் மரித்தார். அவர் நம் பாவங்களை சுமந்தார். நமக்காக அடிக்கப்பட்டார். நமக்கு சமாதானம் உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் விழுந்தது என்று வேதம் சொல்லுகிறது.

ஆம் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு அருள உங்களுக்கு சமாதானம் வழங்க உங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் வர அவர் மரித்தார். உங்களுக்காக சிலுவையில் மரித்த இயேசுவை நீங்கள் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வீர்களா?

நீங்கள் இருக்கின்ற இடத்திலேயே அவரை ஏற்றுக் கொண்டு அவர் இலவசமாக கொடுக்கும் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 


Bro. Mohan C. Lazarus is a renowned evangelist, through him, the LORD started His Ministry by name – ‘Jesus Redeems Ministry’, with a core object of telling the world that the LORD Jesus Christ is the only Redeemer.

Social Share