உங்களுக்கு சமாதானம்!
Bro. Mohan C. Lazarus
Reaching out people

ஒரு மனோதத்துவ மருத்துவரிடத்திலே ஒரு மனிதன் வந்தான். “என் உள்ளத்திலே சந்தோஷமோ, சமாதானமோ இல்லை;  கவலையும், வெறுப்பும் எப்பொழுதும் என் உள்ளத்திலிருக்கிறது;  நான் சந்தோஷமாயிருக்க எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்” என்றான்.

மருத்துவர் அவனிடம் “நமது பட்டணத்தில் ஒரு சர்க்கஸ் நடைபெறுகிறது; அதில் ஒரு கோமாளி வந்து, எல்லோரையும் சிரிக்க வைக்கிறான். அவனைப் பார்த்து, அவன் பேசுவதைக் கேட்டு சிரிக்காதவர்களே இல்லை. நீயும் அங்கு செல், சில மணி நேரம் உன் கவலையை மறந்து சந்தோஷமாய் இருக்கலாம்” என்று ஆலோசனை கூறினார்.

வந்திருந்த மனிதன் சொன்னான்;  “நான்தான் அந்தக் கோமாளி. ஆயிரமாயிரமான மக்களை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்துகிற அந்தக் கோமாளி நான்தான். மற்றவர்களுக்கு முன்பாக சந்தோஷமாக நடித்து அவர்களைச் சிரிக்க வைக்கிறேன், என் உள்ளத்திலோ சமாதானமற்ற நிலை” என்று கூறின போது மருத்துவர் செய்வதறியாது திகைத்தார்.

இன்று உங்கள் நிலையும் இதுதான். வெளியில் சந்தோஷமாயிருப்பது போலக் காண்பிக்கிறீர்கள்; உங்கள் உள்ளத்திலோ சந்தோஷமில்லை. உங்கள் நண்பருக்கு மத்தியில், உறவினர்களுக்கு மத்தியில் நீங்கள் மிகுந்த சந்தோஷமாய் வாழ்வது போல  நடிக்கிறீர்கள். உங்கள் உள்ளத்திலோ சமாதானமில்லை. மற்றவர்களுக்கு நன்மை செய்து அவர்களை சந்தோஷப்படுத்துகிறீர்கள்; உங்கள் உள்ளத்திலோ நிலையான சமாதானமில்லை.

மற்றவர்களுக்கு மத்தியில் இருக்கும் போது, உங்கள் படிப்பைக் குறித்து, பதவியைக் குறித்து, செல்வாக்கைக் குறித்து, சம்பாத்தியத்தைக் குறித்து ஒரு சந்தோஷம் உள்ளத்தில் வருகிறது. கொஞ்ச நேரம்தான்@ அந்த சந்தோஷம் நிலையாய் இருக்கவில்லை. தனிமையில், உங்கள் உள்ளத்தில் வெறுமை, திருப்தியற்ற நிலை, நிம்மதியான உறக்கமில்லை, குழப்பமான வாழ்க்கை.

சமாதானமில்லை….
உள்ளத்திலே சமாதானமில்லை….
சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள என்ன செய்வது?

கண்கள் இச்சித்தபடியெல்லாம் நடந்தாயிற்று@ மனதும், மாமிசமும் விரும்பினதையெல்லாம் அனுபவித்தாயிற்று@ உலகிலுள்ள சிற்றின்பங்களையெல்லாம் ருசித்தாயிற்று…

ஆனாலும்,
சமாதானமில்லை…
எதிலும் பூரண சந்தோஷமில்லை….

ஏன் சமாதானமில்லை

“துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லை” என்று என் தேவன் சொல்லுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக “விஷ ஊசி வழக்கு” என்ற ஒரு வழக்கு சென்னை நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அதனுடைய காரணம் இதுதான்.
நான்கு ஐந்து நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து சென்னைக்குப் பல லட்சம் ரூபாய்களோடு வியாபாரத்திற்காக வரக் கூடிய வியாபாரிகளைக் கொள்ளையடிக்கத் தீர்மானித்தார்கள். அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் (டுழனபந) அரசாங்க அதிகாரியைப் போல நுழைவார்கள். “இந்தப் பணத்திற்குக் கணக்கு என்ன? என்று கேட்பார்கள். அவர்கள் உண்மையைச் சொன்னாலும், நம்பாதவர்களைப் போல நடித்து அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக காரில் கூட்டிச் செல்வார்கள். உண்மையை வரவழைக்க ஒரு ஊசி மருந்தைச் செலுத்துவதாகக் கூறி ஊசியின் மூலம் விஷத்தைச் செலுத்திவிடுவார்கள். அவர் மரித்ததும், பட்டணத்திற்கு வெளியில் காட்டுப் பகுதியில் பிணத்தை எரித்து விட்டு லட்சக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடித்துக் கொள்வார்கள்.

லட்சம் லட்சமாகப் பணம் கிடைத்தது. பங்கு வைத்துக் கொண்டார்கள். அடுத்தவர்களைக் கொள்ளையடித்தே லட்சாதிபதி ஆகிவிட்டார்கள். காவல் துiறையினரால் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சில மாதங்கள் கடந்தது@ இந்தக் கொலை, கொள்ளையில் முக்கியப் பங்கு வகித்த, அதிகமாக லாபம் சம்பாதித்த ஒருவர் போலீசில் வந்து நடந்த எல்லாவற்றையும் கூறி உண்மையை ஒத்துக் கொண்டார். அவருடைய உதவியினால் சம்பந்தப்பட்ட யாவரும் கைது செய்யப்பட்டார்கள்.

நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்ரூவர் ஆன மனிதர் எல்லா உண்மைகளையும் நீதி மன்றத்தில் தெரிவித்தார்.

நீதிபதி அவரிடம் ஒரு கேள்வி கேட்டார், “உங்களைத்தான் ஒருவரும் சந்தேகப்படவில்லையே, பின் ஏன் நீங்களாகவே வந்து குற்றத்ததை ஒத்துக் கொண்டீர்கள்?”
இதற்கு அந்த மனிதன் சொன்ன பதில் ஆச்சரியமானது: கொலை செய்து, கொள்ளையடித்து லட்சாதிபதியாக மாறினான். இனி மகிழ்ச்சியான வாழ்க்கைதான் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.ஆனால், இரவு படுக்கைக்கு செல்லும்போது அவனால் உறங்க முடியவில்லை.  பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பூஜைகளைச் செய்தான். ஆனாலும் சமாதானத்தைக் காணவில்லை.
தர்மங்களைச் செய்து பார்த்தான். மனதிலே சாந்தி கிடைக்கவில்லை.

ஓவ்வொரு நாளும் தனிமையில் நரக வேதனையை அனுபவித்தான். யாரிடத்திலும் சொல்ல முடியாத நிலை. கடைசியில் தன் தவறை ஒத்துக் கொண்டால்தான் தனக்கு சமாதானம் உண்டாகும் என்ற நிலையில் அவனாகவே வந்து தவறை ஒத்துக் கொண்டான்.

ஆம்! என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது என்று பாவம் செய்த மனிதன் கதறுகிறான். ஒருவனுடைய பாவமே அவனது மனச்சாட்சியில் குற்ற உணர்வை கொடுத்து அவன் சமாதானத்தைக கெடுத்து விடுகிறது.

கொலை செய்வதும், கொள்ளையடிப்பதும்தான் பாவம் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல@ பொல்லாத சிந்தனை, விபச்சாரம், வேசித்தனம், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு இவைகள் மனுஷனுடைய உள்ளத்திலிருந்து புறப்பட்டு அவனை தீட்டுப்படுத்தும்.
கண்களில் இச்சைகள், மாம்சத்தின் இச்சைகள், குடிவெறி, பண ஆசை, மற்றவர்களை வஞ்சித்தல், ஏமாற்றுதல், லஞ்சம் இவையெல்லாம் ஒரு மனிதனைப் பரிசுத்தமுள்ள தேவனைவிட்டு பிரித்து விடுகிறது. ஆகவே, தன் உள்ளத்தில் சமாதானத்தை இழந்து தவிக்கிறான்.

இன்று உங்கள் நிலைமை என்ன?

ஆரம்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் பாவச் சிற்றின்பங்களும், மாம்ச இச்சைகளும் நாட்கள் செல்லச் செல்ல மனிதனை அடிமைப்படுத்தி விடுகிறது. அவர்கள் விட்டு விட விரும்பியும் அந்த பாவப் பழக்கத்தை விட முடியாமல் தவிக்கிறார்கள். பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறான்.
பாவத்தினாலும், பாவ பழக்கங்களினாலும் ஏற்படும் சமாதானக் குறைவு ஒரு பக்கம்@ தன் பாவக் கா காரியங்கள் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயம்.
யார் என்னை இந்தப் பாவத்திலிருந்து விடுதலையாக்குவார்? என் பாவம் மன்னிக்கப்படுமா? பாவத்திலிருந்து விடுதலை கிடைக்குமா? நானும் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமா?

இவ்விதமாய்க் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா?

உங்களுக்கு ஒரு நற்செய்தி:

நீங்களும் பாவத்திலிருந்து விடுதலை பெறலாம். பாவ மன்னிப்பை பெறலாம். மெய்யான தெய்வீக சமாதானத்தைப் பெறலாம்.

சமாதானத்திற்கு வழி!!

பாவத்தினால் சமாதானத்தை இழந்து தவித்த மனுக்குலத்தின் மீது வைத்த அன்பினால் இவ்வுலகத்தை சிருஷ்டித்த தேவன் மனிதனாய் உலகத்தில் வந்தார். மனிதனுக்குப் பாவ மன்னிப்பை உண்டாக்க, பாவத்திலிருந்து விடுதலை கொடுக்க ஏழை மனிதானாய் அவதரித்தார். அவர்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

சமாதானப் பிரபுவாக வந்த இயேசு கிறிஸ்து, மனிதனுக்குப் பாவ மன்னிப்பை, சமாதானத்தை கொடுக்க சிலுவையில் மரித்தார். சிலுவை மரத்தில் கைகளிலும், கால்களிலும் ஆணி அடிக்கப்பட்டு தன் பரிசுத்தமுள்ள இரத்தத்தைச் சிந்தினார்.

“இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது” என்பதை இந்து வேதங்களும் ஒத்துக் கொள்கிறது. “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.”

“இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின தன்னுடைய இரத்தத்தினால் சமாதானத்தை உண்டாக்கினார்.” காரணம்@ “இயேசு கிறிஸ்து தாமே நம்முடைய பாவங்களைத் தம்முடைய சாPரத்தில் சிலுவையின் மேல் சுமந்தார். நம்முடைய அக்கிரமங்கள் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது.”

ஆம், உங்களுக்காக, நீங்கள் செய்த பாவத்திற்காக இயேசு சிலுவையில் தண்டனையை ஏற்றுக் கொண்டார். உங்கள் பாவங்களை மன்னிக்க, அவர் சிலுவையில் உங்களுக்காக இரத்தம் சிந்தினார். உங்கள் பாவங்களை மன்னிக்க, அவர் சிலுவையில் உங்களுக்காக இரத்தம் சிந்தினார். உங்கள் பாவம் மன்னிக்கப்பட, மெய்யான சமாதானத்தைப் பெற இயேசு கிறிஸ்து அல்லாமல் வேறு வழியில்லை.

மனிதன் தன் தெய்வ பக்தியினாலோ, தான தர்மங்களினாலோ பாவ மன்னிப்பை, சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பாவ மன்னிப்பையும், மெய் சமாதானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
சிலுவையில் மரித்த இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இன்றும் அவர் உயிரோடிருக்கிறார். உங்களை இயேசு நேசிக்கிறார். உங்களுக்குச் சமாதானம் கொடுக்க விரும்புகிறார்.

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன்;@ உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்i. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27) என்று உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறார்.

இயேசு உங்களை நேசிக்கிறார்.
இயேசு உங்களுக்காக மரித்தார்.
இயேசு உங்களை அழைக்கிறார்.


நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம்:

நீங்கள் பாவி என்பதை ஒத்துக் கொண்டு, உங்கள் பாவத்தை இயேசுவிடம் அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவை ஆண்டவரும், இரட்சகருமாக உங்கள் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசு உங்கள் உள்ளத்தில் வரும்போது, உங்கள் பாவங்களை மன்னித்து, மெய்யான தெய்வீக சமாதானத்தைத் தருவார்; உங்கள் வாழ்க்கையே சந்தோஷமான வாழ்க்கையாய் மாறிவிடும்.

இந்த மெய்யான தெய்வீக சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?
அப்படியானால் முழு இருதயத்தோடும் இப்படி ஜெபியுங்கள்:

இயேசுவே!
நீரே மெய்யான தெய்வமென்று நான் விசுவாசிக்கிறேன்!
நீர் எனக்காக, என் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தீர் என்று விசுவாசிக்கிறேன்!
நான் ஒரு பாவி என்று உணர்கிறேன், என் பாவங்களை மன்னியும்!
உம்மை என்னுடைய ஆண்டவராக, இரட்சகராக என் உள்ளத்தில ஏற்றுக் கொள்கிறேன்!
பாவ மன்னிப்பின் சமாதானத்தை எனக்குத் தாரும்!
இன்று முதல் நீரே என் ஆண்டவர்… என் இரட்சகர்… ஆமென்.

 

 


Bro. Mohan C. Lazarus is a renowned evangelist, through him, the LORD started His Ministry by name – ‘Jesus Redeems Ministry’, with a core object of telling the world that the LORD Jesus Christ is the only Redeemer.

Social Share