தலைவர்கள்: தலைமைத்துவத்தில் முன்னேறுதல் ( பாகம்:1)
Rev.J.N. Manokaran
Parent responsibility

கிரேக்க பாரம்பரியம்

‘மென்டரிங் - கிரேக்க பதத்தில் இந்த வார்தையின் பொருள் நிலைத்திருத்தல்... இது எதை குறிகின்றது என்றால் ஒரு வாலிபன் மற்றும் ஒரு பெரியவருக்கு இடையே உள்ள நிலையான உறவை குறிகின்றது.  தொடர்ந்து இடைப்படுவதின் மூலம் பெரியவர் அந்த வாலிபனுக்கு தன்னுடைய ஆதரவையும், வழிநடத்துதலையும் தந்து கஷ்டமான சூழ்நிலையில் சவால்களை மேற்கொள்ளவும் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகின்றார்”.

வேதாகமம்

கிரேக்கர்கள் இதை சுதந்தரிப்பதற்கு முன்பிலிருந்தே வேதாகமத்தில் இது இடம்பெற்றுள்ளது.  ஆதியாகமத்தில் மோசே தன்னுடைய மாமனார் எத்ரோ மூலமாக ஆலோசனை மற்றும் உற்சாகப்படுத்தப்பட்டு பிரதிநிதிகளை உருவாக்கி எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொள்வதை படிக்க முடிகின்றது.  மோசே இஸ்ரவேலில் இரண்டு வாலிப தலைவர்களை உருவாக்கினார்: யோசுவா மற்றும் காலேப் மற்றொரு வேதாகம பகுதியில் ரூத்தின் மாமியான நகோமி அவனை உருவாக்குகின்றான்.  இளம் தீர்க்கதரிசியான எலிசாவை எலியா உருவாக்குகின்றார்.  இவை யாவும் பெற்றோராக, அவர்கள் தங்களை பின்பற்றியவர்களுக்கு இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.

பவுலின் பயிற்சி முறையானது ஒவ்வொரு  நபருக்கும் அல்லது ஒவ்வொரு குழுவுக்கும் வேறுப்பட்டதாக காணப்பட்டது.  அவருடைய பயிற்சியானது சூழ்நிலைக்கு ஏற்றவாறு புதுமையாக காணப்படும்.  பவுல் தன்னுடன் வேலை செய்கின்ற விதத்திலிருந்து அவருடைய தலைமைத்துவ அனுகுமுறையை வெளிப்படுத்துகின்றதாக உள்ளது.

தீத்துவுக்கு அவர் குறிப்புகளை அனுப்புகின்றார்.  தீமோத்தேயுடன் அடிக்கடி உற்சாகப்படுத்துகின்றார்.  அவர் வேலையாட்களுக்கு பயிற்சி கொடுத்து உருவாக்கி தான் விட்டு வந்த நகரங்களில் அந்த பணியை தொடர்ந்து செய்ய வைத்தார்.  தீமோத்தேயு நடத்தி செல்வதை காட்டிலும் கவனித்தலை கற்றுக்கொள்ளுதலை அதிகம் விரும்புகிறவராக இருந்தார்.  ஆனால் பவுல் அவனை உருவாக்கியது மூலம் சார்ந்திருக்கும் தலைவராக இருந்தவன் தனித்து நின்று செயல்பட கூடிய தலைவராக மாறினான்.  பவுல் திரளான தலைவர்களை உருவாக்க முயற்சி செய்யவில்லை.  தனிநபர்கள் மற்றும் இருவராக இருந்தவர்களிடம் தனிப்பட்ட நேரம் செலவிட்டு, தரிசனம், மனதுருக்கம், கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைகள், சிறப்பான ஊழியத்தை செய்வதற்கு தேவையான திறமைகள் போன்றவற்றை அவர்களுக்குள் செலுத்தினார்.
(தொடரும்)


Rev.Manokaran is a gifted Bible Teacher who regularly organizes and conducts programmes and Workshops for Pastors and Chruch Leaders. He could be reached at jnmanokaran@gmail.com.