தேவதிட்டத்தை எதிர்க்காமல்
சகோ. சாம்சன் பால்
We have to run away from Sins

யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கை பண்ணி..  1 சாமு -20-16

தாவீதின் வளர்ச்சியும், எழுச்சியும் நேரடியான பாதிப்புகளை சவுல்ராஜாவின் பட்டத்து இளவரசனாகிய யோனத் தானைத்தான் பாதிக்கும். எனவே தான் தாவீதை அழிக்க சவுல் மிகவும் வேகமாயிருந்தான். ஆயினும் தாவீதின் எழுச்சியும், சாதனையும் தேவனால் திட்டமிடப்பட்ட ஒன்று. தேவன் அவனை உயர்த்தத் திட்டம் வைத்திருக்கின்றபோது அதனைத் தடுக்க முயற்சி செய்வது யாருக்கும் பயன் தராது.

இந்த வெளிப்பாடும் அறிவும் இறைவனாகிய யோனாத்தானுக்கு இருந்தது. தேவனால் உயர்த்தப்படும் மனிதனுக்கு எதிராகச் செயல்படுவது நல்லதல்ல என்பதை அவன் புரிந்துகொண்டான். அவன் தந்தையின் உணர்வுகளைவிட, தேவனுடைய திட்டத்தை மதிப்பதையே முக்கியமாகத் தெரிந்துகொண்டான்.

யோசேப்பை தேவன் உயர்த்த விரும்பினபோது, அவனுடைய சகோதரர்கள் அதனைத் தடுக்க முயற்சி செய்தனர். அந்த முயற்சி அவர்களுக்கு சோதனைகளையே கொண்டு வந்தன. இளவயதுகளில் இன்னொருவர் அல்ல, நானே உயர்ந்து நிற்கவேண்டும். என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கையானது. ஆனால் இன்னொருவர் உயர்வதும், வளர்வதும், பிரசித்தி அடைவதும், பலரால் புகழப்படுவதும் தேவனுடைய திட்டத்தின் விளைவாக இருக்ககூடும். எனவே அங்கே அவர்களின் உயர்வுகளுக்குத் தடைக்கற்களைப்பாட விரும்பாமல், அவர்களின் உயர்வுகளை ஒத்துக் கொள்வதும், ஏற்றுக்கொள்வதுமே தேவையானது.

இஸ்ரவேல் மக்களோடு தேவன் இருந்தார்.  ஆனால் பாலாக் என்ற ராஜா அவர்களுக்கு எதிராக எதையாவது செய்ய விரும்பினான். ஆனால் எதையும் செய்ய அவனால் இயலவில்லை. ஏனென்றால் இஸ்ரவேலர்கள் எதிரிகளால் விழுந்து போகாமல் காப்பாற்றப்படும் தேவதிட்டம் இருந்தது. ஆம். யோனத்தானைப் போல் பிறர் வாழ்வில் உள்ள தேவதிட்டங்களைப் புரிந்து கொள்வோம்.


 


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.