கறையான்கள்
திரு. ராஜாசிங்
10 Marriage Killers

சின்ன சின்ன கறையான்கள், பெரிய மரத்தையே நாசமாக்கி விடுகிறதே... அப்படியே சின்ன சின்ன "கறையான்கள்" உங்கள் குடும்ப மகிழ்ச்சியை கெடுத்துவிடக் கூடுமே... எச்சரிக்கையாய் இருக்க சில ஞாபகப்படுத்துதல்கள்...!

திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த தம்பதிகளுக்கு:

* அடிக்கடி, ஒருவர் மேல் ஒருவர் கோபப்பட்டுக்கொண்டே இருத்தல்...

* துணைவரை பாராட்ட சற்றேனும் மனமில்லாமை..

* எதற்கெடுத்தாலும், குற்றம் கண்டுபிடித்தல்..

* பிள்ளைகளுக்கு முன்பாக குறைகூறுதல்.

* மற்றவர்களோடு ஒப்பிட்டு, ஒருவரை ஒருவர் தைரியமாய் மட்டம் தட்டிப் பேசுதல்..

* வெளிப்படையாக காரியங்களை பகிர்ந்து கொள்ளாததால் ஏற்படும் சந்தேகங்கள்...

* ஒத்துழையாமையை குடும்பத்தில் கடைபிடிக்க முயற்சித்தல்...

* பாலியலில் ஒருவர் தேவையை மற்றவர் பூர்த்தி செய்ய தொடர்ந்து இஷ்டம் இல்லாமை...

* தேவையற்ற பிடிவாதங்கள்

* துணைவரின் மேல் வைத்துள்ள அன்பை, செயல் வடிவில் வெளிக்காட்டாமை...

* மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உரிய நேரம் கொடாத கணவர்..

* திருமண பந்தம் இருவருக்கும் உரியது.. இதில் மூன்றாம் நபருக்கு முக்கியத்துவம் அளிப்பது...

* துணைவரைக்காட்டிலும், தன் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை அதிகம் நேசிப்பது...

* குடும்ப ஜெபம் இல்லாமல் தனித்தனியே ஜெபிப்பதும், ஜெபிக்காமலும், வேதம் வாசிக்காமலும் தூங்கச் செல்லுதல்...

* ஒருவரையொருவர் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தல்...

* பழைய கசப்பான அனுபவங்களை கிளறி அடிக்கடி அடுத்தவரை காயப்படுத்திக் கொள்ளுதல்...

* கணவன் / மனைவி பேசாமல் நாட்களையும், வாரங்களையும், மாதங்களையும், வருடங்களையும் கடத்துவது


திரு. ராஜாசிங் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் ஊழியத்தை செய்து கொண்டு வருபவர். 29 ஆண்டுகளகளாக 'Scripture Union'ல் இருந்த இவர் "Shalom Family Enrichment Ministries" மூலமாக குடும்பங்கள் மத்தியில் ஊழியத்தை தொடர்ந்து செய்கின்றார். 91- 9382720809 என்ற தொலைபேசி எண் மூலமாக இவரை தொடர்பு கொள்ளலாம்.