மூத்த பெற்றோர்களின் பிள்ளைகளே
Shalom Family Enrichment Ministries
Family Pages Article Image

வயதான ஒரு தாய் எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகள்..

"அன்பு குடும்பத்துக்கு, சில வருடங்களுக்கு முன் நான் தனியாக செய்த வேளைகளுக்கு, என் பிள்ளைகளை இப்போது எதிர்பார்த்து காத்திருப்பது காலத்தின் கட்டாயாம். உண்மையை சொல்ல வேண்டுமானால், என் பொறுப்புகள் பிள்ளைகளிடத்திற்கு கைமாறிப் போய்விட்டது. ஒரு வகையில் நானும் ஒரு குழந்தை தான். உங்கள் அன்பிற்காக, வருகைக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் குழந்தை".

உங்கள் வீட்டில் கூட இப்படி ஒருவர் இருக்கலாம். தன் எண்ணங்களை குழித்தோண்டி புதைத்து வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத, வயது முதிர்ந்த தாயாகவோ, தந்தையாகவோ.

இதைத் தடுக்க இதோ எங்களின் அனுபவ யோசனைகள்:

* உங்களை பெற்றெடுத்து ஆளாக்கி, அத்தனை தியாகம் பண்ணி, இன்று நீங்கள் இத்தனை உயர்வில் இருப்பதற்கு உங்கள் பெற்றோர்தானே காரணம்.. இன்று தள்ளாடும் உங்கள் பெற்றோர்களை நீங்கள் இன்னும் சிறப்பாய் கவனிக்க வேண்டுமே..

* உங்கள் வீட்டில் தங்கியிருப்பார்கள் எனில், அவர்களுடன் உட்கார்ந்து அனுதினமும் ஓர் 10 நிமிடமாவது பேசுங்கள்.

* மருத்துவ உதவி தேவைப்படும்போது, உடன் தானே மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.. அல்லது ஒழுங்கு பண்ணுங்கள்.

* அவர்களுக்குப் பென்சன் இல்லையென்றால், மாதா மாதம், ஒரு நல்ல தொகையை அவர்களின் தனிப்பட்ட செலவுக்குக் கொடுத்து விடுங்கள்.. கணக்கு கேட்க வேண்டாம்..

* சிறு சிறு வேலைகளை , அவர்களே விரும்பினால், செய்யட்டும்.. கட்டாயப்படுத்தாதீர்கள்.. அவர்கள் வேலையாட்களல்ல..VIPs

* குடும்ப ஜெபத்தில், அவர்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள்.. அவர்கள் விரும்பினால், அடிக்கடி அவர்கள் ஜெபிக்கட்டும்.

* தூரமான இடத்தில் இருக்கும் ஆண் பிள்ளைகள், பெற்றோரோடு அதிக நேரம் பேசுங்கள்.. அடிக்கடி பேசுங்கள்.. "சட்டு புட்டு" என்று போனை வைத்து விடாதீர்கள்.. அது அவர்களை துக்கப்படுத்தும்.

* பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டியோடு பேசச்சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.

"உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது." - எபேசியர் 6:2

A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.