Do You know

ஏசயாவினுடைய காலத்தில்

பழைய ஏற்பாட்டின் பெரிய தீர்க்கதரிசன புத்தகம் 'ஏசயா'. இதை எழுதின ஏசயாவினுடைய காலத்தில் 5 அரசர்கள் தென்பகுதி இராஜ்யமாகிய யூதாவை ஆண்டார்கள். இவர்களுடைய பெயர்கள்: உசியா, யோதாம்,ஆகாஸ், எசேக்கியா, மனாசே. வடதிசை அரசை ஆண்ட 2 ஆம் யெரொபெயாம் காலத்திலிருந்து ஏசயா தீர்க்கதரிசியாக ஊழியம் செய்தார். புதிய ஏற்பாட்டில் ஏசாயாவின் பெயர் 21 தடவைகள் வருகின்றன
- "தீர்க்கதரிசன புத்தகங்கள் ஓர் அறிமுகம்" ( ஆசிரியர் : Dr. Selwyn ) என்ற புத்தகத்திலுருந்து


தீத்து ஒரு கிரேக்கன்

தீத்து புறசமயத்தைச் சார்ந்த ஒரு கிரேக்கன் ( கலா 2:3). இவனை சிறந்த அறிவாளி என்று பவுல் எண்ணினார். கி.பி.50-ஆம் ஆண்டு சீரியாவிலுள்ள அந்தியோகியாவிலிருந்து எருசலேமில் கூடிய ஆலோசனைச் சங்கத்திற்குத் தீத்துவைப் பவுல் அடியார் தம்மோடு அழைத்துச் சென்றார் ( கலா 2:1). ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் தீத்து இரண்டுமுறை கொரிந்து நகருக்குச் சென்று அங்கே தங்கி இறைவனுடைய செய்தியை கூறினார்.
- - புதிய ஏற்பாடு ஓர் புத்தகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் )


சீகார் கிணறு

யாக்கோபு கீகேமிலே எமோரியரின் கையிலிருந்து வாங்கின நிலத்திற்கு சீகார் என்று பெயர். கெர்சீம் மலையடிவாரத்திலிருக்கிற அந்த இடத்திலே தான் யோசேப்பின் எலும்புகளை அடக்கம் பண்ணினார்கள். ( யோசுவா 24:32 ) . இவ்விடத்தில் யாக்கோபு வெட்டிய மிகப்பெரிய கிணறு உண்டு. இதற்கு சீகார் கிணறு என்று பெயர். இயேசு இக்கிணற்றின் மேட்டிலிருந்து கொண்டு தான் சமாரியா பெண்ணிடம் பேசினார். ( யோவான் 4:12 )
- -- வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


ஆசியாவிலே முதன்முதலில்

தாய் மொழி கற்காமல் சுவிசேஷத்தை இவர்களுக்கு சொல்லமுடியாது என்பதை நன்கு உணர்ந்த சீகன்பால்க் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து மண்தரையில் அமர்ந்து எழுத்துக்களை எழுதிக் கற்றார். இரண்டு வருடத்தில் தமிழ் வார்த்தைகள் கொண்ட தமிழ் அகராதியும் தமிழ் இலக்கண புத்தகத்தையும் வெளியிட்டார். இவரது ஊழியங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை பாராட்டி ஆசியாவிலே முதன்முதலில் அச்சடிக்கும் இயந்தரம் 1712-ம் ஆண்டு தரங்கம்பாடிக்கு இங்கிலாந்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது. இந்த அச்சு இயந்தரம் மூலம் புதிய ஏற்பாடு, முதல் நாட்காட்டி பாட்டு புத்தகங்கள் போன்றவை அச்சடிக்கப் பட்டன.
- --மறக்க முடியாஅத மாமனிதர்கள் ( நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வெளியீடு)