Do You know

தமிழ்நாட்டு நாசரேத்தில் 'அனாதை சாலை'

இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஊழியம் செய்ய வந்த மர்காஷிஸ், 1875ம் ஆண்டு இடையன்குடியில் ஊழியப் பயிற்சிப்பெற்று தமிழ் மொழியையும் கற்றுக் கொண்டார். 1876ம் ஆண்டு, நாசரேத் ஊழியப் பொறுப்பை ஏற்றார். அங்கு அவர் பணியாற்றிய காலத்தில், பெருமழை, பஞ்சம் மற்றும் காலராவினால் பல மக்கள் மடிந்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததால் அநேகப் பிள்ளைகள் அநாதைகளாய் பரிதபிக்கப்பட்ட நிலையிலிருந்தனர். அந்த அனாதைப் பிள்ளைகளுக்கென்று 1877இல் விடுதி ஒன்றை ஆரம்பித்தார்.அப்பொழுது அது 'அனாதை சாலை' என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது தொழிற்கூடமாக மாறியது. இன்று Art and Industrial SChool என்ற I.T.I சிறந்த ஆகச் செயல்படுகிறது.
- --மறக்க முடியாத மாமனிதர்கள் ( நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வெளியீடு)


எஸ்ராவும், நெகேமியாவும்

* 2 புத்தகங்களும் பாபிலோனில் ஆரம்பித்து எருசலேமில் முடிகிறது
* 2 புத்தகங்களின் ஆரம்பத்திலும் ராஜாவின் ஆணையை பார்க்கிறோம்
* 2 புத்தகங்களின் 9 ம் அதிகாரங்கள் பாவ அறிக்கையின் ஜெபமாக இருக்கின்றன
* 2 புத்தகங்களிலும் கட்டப்படுதல் முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கிறது
- - சரித்திர புத்தகங்கள் ஒர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


சனகரீப் சபை

எழுபது பேர் கொண்ட யூத பேரவைக்கு சனகரீப் சபை என்று பெயர். யூதர்களில் நடவடிக்கைகளை விசாரித்துத் தீர்ப்பு செய்யும் அதிகாரம் இச்சபைக்கு இருந்தது. இதன் தலைவராக அன்னா என்பவர் இருந்தார். பிறகு ரோமர்கள் இவரை நீக்கிவிட்டுக் காய்பாவை பதவியமர்த்தினர். இந்த காய்பா அன்னாவின் மருமகன்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


ஒத்த சுவிசேஷங்கள்

மத்தேயு, மாற்கு, லூக்கா இந்த மூன்று சுவிசேஷங்களும் சேர்த்து புதிய ஏற்பாட்டில் மூன்றில் ஒரு பங்காகிறது. இந்த மூன்று சுவிசேஷங்களிலும் பல வசனங்கள் ஒன்றையொன்று ஒத்து காண்ப்படுவதால் அவைகள் "ஒத்த சுவிசேஷங்கள்" (Synoptic Gospels)என்று அழைக்கபடுகின்றன. இந்த மூன்று புத்தகங்களும் ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டிய புத்தகங்களாகும்.
- - - புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கான ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து