Do You know

மீண்டும் தேவாலயம்

கி.பி.70ம் ஆண்டில் ரோமர்களால் எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது. இஸ்ரவேலர்கள் எருசலேமிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் உலகத்தின் பல பாகங்களுக்கும் ஓடிப்போய் குடியேறினர். இரண்டாயிரம் ஆண்டுகளாக சிதறிடிக்கப்பட்டு அடிமைகளாகக் கொண்டு போகப்பட்ட யூதர்கள் மீண்டும் 1948ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது இஸ்ரேலிய அராபிய யுத்தத்தின் போதுதான் அவர்கள் எருசலேம் நகரத்தைக் கைப்பற்றினர். ஆனாலும் இன்று வரை யூதர்கள் தேவனை தொழுதுகொள்வதற்கு தேவாலயம் இல்லை. ஆனால், இஸ்ரவேலில் பல ஜெப ஆலயங்கள் உண்டு.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


நாரயன் வாமன் திலக்

நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரம்(அப்.9:15). இவ்விதம் பவுல் அப்போஸ்தலனை ஆண்டவர் தெரிந்தெடுத்து, யூதரல்லாத மக்கள் இரட்சிப்படைய பயன்படுத்தினார். தனது சித்தத்தையும் நிறைவேற்ற அந்தந்த காலங்களில் பல மனிதர்களை தேவன் பயன்படுத்தினார். அவ்விதம் தெரிந்தெடுக்கப்பட்டு, இந்தியாவில் உயர்ஜாதியினர் மத்தியில் இரட்சிப்பின் செய்தியை அறிவித்த தேவ மனிதர்தான், மகாராஷ்டாவில் 1861ம் ஆண்டு ஒரு அந்தனர் குடும்பத்தில் பிறந்த நாரயன் வாமன் திலக்.
- --மறக்க முடியாத மாமனிதர்கள் ( நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வெளியீடு)


பவுலின் நாள்களில் கொரிந்து

பவுலின் நாள்களில் கிரீஸ் நாட்டில் கொரிந்து மிக முக்கியமான, செல்வத்தில் நம்பமுடியாத அளவுக்குச் சிறந்து காணப்பட்டது. ஆண்கள் தங்கள் நாள்களை விளையாட்டுப் போட்டிகளிலும், பேசுவதிலும் கழித்தனர்.ஒழுக்கக் கேடுகளும் வளர்ந்தன. இந்த பட்டணத்தில் கடல் மட்டத்திலிருந்து 1875 அடி உயரத்திலும், நகர அளவிலிருந்து 1500 அடி உயரத்திலும் உள்ள குன்றின் மீது காம தேவதைக்கென (The Goddess of Love ) ஒரு கோயில் அமைந்திருந்தது.சுமார் 7 லட்சம் மக்கள் வாழ்ந்தனர்.உலகச் சிறப்பு வாய்ந்த பல்கலைக் கழகமும் இந்நகரில் இருந்தகு. பல நாடுகளிலிருந்து மாணவர்கள் அங்கே கல்வி கற்க வருவார்கள்.
- - புதிய ஏற்பாடு ஓர் அறிமுகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் ) என்ற புத்தகத்திலிருந்து


அல்லேலூயா என்ற வார்த்தை

அல்லேலூயா என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று தெரியுமா?. அல்லேலூயா என்ற வார்த்தை எபிரேய மொழி வார்த்தை. இரண்டு வார்த்தைகளை இது உள்ளடக்கியிருக்கிறது. முதல் பகுதி வார்த்தை "அல்லல்" (Hallal) என்றால் துதி என்று அர்த்தமாகும். இரண்டாம் பகுதி வார்த்தை, "யாவே" (Yahweh) அதாவது யெகோவா ( கர்த்தர்) என்ற அர்த்தத்தை கொண்டிருக்கின்றது.
- - Rev.Sunil Noah ( Texas, USA ) கொடுத்த தேவசெய்தியிலிருந்து