Do You know

ஒரு பெண்ணுக்கு எழுதப்பட்ட

பதின்மூன்றே வசனங்களடங்கிய இந்த கடிதம் பெயர் தெரியாத ஒரு கிறிஸ்தவப் பெண்ணுக்கு எழுதப்பட்டது. வேதத்தில் இந்த ஒரே ஒரு புத்தகம் தான் ஒரு பெண்ணுக்கு எழுதப்பட்டுள்ளது. இந்த சுருக்கமான கடிதத்தில் "உண்மை" ( சத்தியம்) என்ற வார்த்தையை ஐந்து முறை காணுகிறோம். கடிதத்தின் முக்கியமான வார்த்தையாகிய "அன்பு" நான்கு முறை இடம் பெற்றுள்ளது. உண்மையும், அன்பும் பிரிக்க முடியாதவை.
- - புதிய ஏற்பாடு ஓர் அறிமுகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் ) என்ற புத்தகத்திலிருந்து


கடவுளின் விரல்

கடவுளின் புத்தகமான திருமறையில் ( பைபிளில்) உள்ள் 66 புத்தகங்களில், பெண்கள் பெயர் கொண்ட புத்தகம் இரண்டு. அவற்றில் எஸ்தர் புத்தகமும் ஒன்று. ( ரூத் புத்தகம் மற்றொன்று). இந்த எஸ்தர் புத்தகத்தில் கடவுளின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவருடைய திட்டங்கள், அவர் செயல் படும் விதம் நன்கு விளங்குகிறது. மேத்யூ ஹென்றி என்னும் புகழ் பெற்ற போதகர், "கடவுளின் பெயர் இங்கு இல்லாவிட்டாலும், அவருடைய விரல் உள்ளது ("if the name of the God is not here, His finger is") என்று குறிப்பிடுகின்றார்.
- - இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் ( எழுதியவர்: டாக்டர் ஞானையா )


போத்திபார்

யோசேப்பை அடிமையாக விலைக்கு வாங்கின போத்திபார் பார்வோனின் அரண்மனையில் பணியாற்றி வந்தான். என்ன பணி என்று நினைக்கிறீர்கள்?. மரண தண்டனை கைதிகளுக்கு தண்டனை நிறைவேற்றும் காவலர்களுக்கு தலைவன். போத்திபார் என்பது அவனது உண்மைப் பெயர் அல்ல; தொழில் பெயர். போத்திபார் என்பதற்கு "படுகொலை செய்பவர்களின் தலைவன்" என்று பொருள்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


சேலா

இசையமைப்பில் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தையின் பொருள் இடைவேளை, அமைதி என்பதாகும். ஒரு பாடலைப் பாடும்போது ஒரு குறிப்பிட்ட வரியைப் பாடினபின் அதன் கருத்தை சற்று கவனமாக யோசித்துப்பார்க்க எடுத்துக்கொள்ளும் இடைவேளை "சேலா" என்று அழைக்கப் படுகின்றது. சங்கீத புத்தகத்தில் இந்த வார்த்தை 71 தடவை வருகிறது.
- -- ஓர் அறிமுகம் (ஆசிரியர் : Dr. Selwyn ) என்ற புத்தகத்திலிருந்து